நீங்க ஷ்ரேயா கோஷலா?

‘StariDuo’ எனும் யூ டியூப் பக்கம் மிகப் பிரபலம். ஸ்டான்லி வின்சென்ட், சாய் ஹரேந்திரன் என இரு இளைஞர்கள் சினிமாப் பாடல்களைப் பாடி வெளியிட்ட வீடியோக்கள் வைரல் ஹிட். இவர்கள் பாடலுக்குப் புதிதாக கம்போஸ் செய்யவில்லை. டி.இமான், யுவன் சங்கர் ராஜா, ரஹ்மான் இசையமைத்த பாடல்களை இவர்கள் பாடி வீடியோவாகத் தயாரிக்கிறார்கள். பாடலில் வரும் பெண் குரல்களையும் இவர்களே கச்சிதமாகப் பாடுவதுதான் ஹைலைட்.

‘கயல்’ படத்தின் ‘உன்னை இப்போ பார்க்கணும்...’ பாடல், ‘ஜில்லா’ படத்தின் ‘கண்டாங்கி கண்டாங்கி...’ என ஹிட்டடித்த தமிழ் சினிமாப் பாடல்களை இவர்கள் உருகி உருகிப் பாடி அசத்துகிறார்கள். ஷ்ரேயா கோஷல் குரலில் அச்சுப் பிசகாமல் அப்படியே பாடும் ஹரியின் குரலை வீடியோவில் பார்க்காமல் ஆடியோ மட்டும் கேட்டால் இது ஓர் ஆண் பாடியது என நம்பவே முடியாத அளவுக்குப் பொருந்திப் போகிறது இருவரது குரல்களும்.

இருவருமே சிங்கப்பூர் தமிழர்கள். ஸ்டான்லி மேஜிக் நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறாராம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருவரும் தனித்தனியாகப் பாடி சமூக வலைதளங்களில் பதிவேற்றிக்கொண்டிருக்க, இணைந்து பாடினால் என்ன என யோசித்ததில் உருவானதுதான் ‘StariDuo’. கடந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இவர்களின் முயற்சி இப்போது அடுத்த லெவலுக்குச் சென்று மலேசியாவில் இந்த வாரம் இவர்களின் ‘முதல் கனவு’ இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மிக விரைவில், தமிழ் சினிமாவில் இவர்களது குரலினைக் கேட்கலாம்.

அந்த உன்னிகிருஷ்ணன் வாய்ஸ்ல உருக்குறீங்க ப்ரோஸ்..!

இவர்களின் கலக்கல் பாடல்களைப் பார்க்க... https://www.youtube.com/c/StariDuo விசிட் அடிங்க!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick