வில்லி சோப்ரா!

ஹாவுட்டில் வில்லி கேரக்டர்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதோ என்னவோ, பாலிவுட்டில் இருந்து பிரியங்கா சோப்ராவை இறக்குமதி செய்திருக்கிறது ஹாலிவுட்.

ரெஸ்லிங் ஸ்டார் ராக் நடிக்கும் ‘பே வாட்ச்’ என்ற படத்தில்தான் பிரியங்காவை இப்படிக் கொடூர வில்லியாக்கியிருக்கிறார்கள். விக்டோரியா லீட்ஸ் என்ற டெரர் கேரக்டரில் பின்னியெடுக்கப்போகும் பிரியங்கா பற்றி ராக் குறிப்பிடும்போது, ‘அவர் அழகானவர், திறமையானவர். அவருடன் நடிக்க நான் ஆவலாகக் காத்திருக்கிறேன். இந்தியாவி்ன் மிகப்பெரிய நடிகையான அவரை இங்கே வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ட்வீட்டியிருக்கிறார். இருவரும் இணைந்து நிற்கும் படங்கள் தற்போது இணையத்தில் தீயாகப் பரவுகின்றன. 

இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா முதல் முறையாக ‘குவான்டிகோ’ என்ற சீரியல் மூலம் ஹாலிவுட்டில் நுழைந்தார். இந்தியப் பெண் ஒருவர் ஹாலிவுட் சீரியலில் ஹீரோயினாக நடிப்பது அதுதான் முதல் முறை. அந்த நிகழ்ச்சி ஹிட்டாக ‘பே வாட்ச்’ பட வாய்ப்பு வந்தது. அடுத்து ஆஸ்கர் விழாவில் விருது வழங்க ஸ்பெஷல் அழைப்பு வந்தது, இந்த ‘பே வாட்ச்’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. காரணம் செம ஹாட்டான ‘பே வாட்ச்’ சீரியலைத்தான் படமாக எடுக்கிறார்கள். பமீலா ஆண்டர்சன் இந்த சீரியலில் நடித்தபின் உலகப்புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் வின்டீசல் ‘ட்ரிபுள் எக்ஸ்’ படத்திற்காக தீபிகா படுகோனை ஹாலிவுட்டுக்குக் கொண்டுபோனார். இப்போது பிரியங்காவையும். இப்படியே எல்லோரையும் ஹாலிவுட்டுக்குக் கடத்திட்டா, நாங்க என்னப்பு பண்ணுவோம்னு ‘தேவர் மகன்’ சிவாஜியைப் போல புலம்புகிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick