சொல்வதெல்லாம் பொய்!

ங்கே இருக்கும் செய்திகள் அனைத்தும் பொய். பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

அழகிரிக்கே இனி இடமில்லை. நமக்கு எங்கே இருக்கப் போகிறது என நினைத்த கனிமொழி புதிதாகக் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். கட்சியின் பெயர் க.தி.மு.க. கனிமொழியின் கட்சியில் கொ.ப.செ-வாக இணைந்து கட்சியை வலுப்படுத்த இருக்கிறாராம் அழகிரி!

‘கபாலி’ படக்குழுவினர் தாங்கள் எடுத்த படப்பதிவுகளைத் தொலைத்துவிட்டனராம். அதனால், இதுவரையில் தங்கள் மொபைல்களில் பார்வையாளர்கள் எடுத்த ‘கபாலி’ படத்தின் புகைப்படங்களை படத்தின் தயாரிப்புக் குழுவிடம் தர வேண்டுகின்றனர்.

படம் பார்த்தவர்களைவிட விமர்சனம் செய்தவர்கள் அதிகம் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தது ‘விசாரணை’ படம்.

நான் அடுத்த படத்தில் சொல்லும் கருத்து கண்டிப்பாகப் புரியும் எனக் கமல் பரபரப்பு பேட்டியளித்திருக்கிறார். அப்படியும் புரியவில்லையென்றால், மக்கள் அனைவரும் நாட்டை விட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

ச.ம.க தலைவர் சரத்குமார், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கட்சியினர் விருப்பம் தெரிவிப்பதாகச் சொன்னதும் சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு இன்று ஒரு நாளில் மட்டும் குவிந்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 2 கோடியே 48 லட்சம்.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick