பொண்ணுங்க கேர்ஃபுல்!

பொண்ணுங்க மட்டும் சும்மாவா பாஸ்? ஆண்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துறாங்கனு சொல்லவா?

‘எல்லாம் ஓகே. நீங்க பார்க்கிற வேலை பிடிக்கலை. வேற வேலை ட்ரை பண்ணவே மாட்டீங்களா?’ என நம்ம லட்சியப் பாதையில் காதலிக்கும்போதே குண்டு வைப்பார்கள். #இதுல அசராம நின்னா கெத்து. இல்லைனா ஆவீங்க வெத்து!

‘இதுவரைக்கும் நான் ஏதாச்சும் ஆசைப்பட்டு கேட்டுருக்கேனா?’, ‘உங்களைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்?’, ‘என் தலை எழுத்து’ போன்ற டயலாக்கை மூணு பிள்ளைகள் பெற்ற பிறகும் உங்களைப் பார்த்துக் கேட்பாங்க பாருங்க. #பயங்கரம்!

‘உங்க அம்மா சும்மா சும்மா வம்பிழுக்குறாங்க. நான் பொறுமையா இருக்கேன். வேற ஒருத்தினா வாயை பிடிச்சு தெச்சு வெச்சிருப்பா!’ என கொடூரமான லாங்குவேஜைப் பேசுவார்கள். #யார் வாயைம்மா?

தனிக்குடித்தனம் பண்ணினாதான் குடும்பத்தை சிக்கனமா ரன் பண்ண முடியும்னு சப்பாத்தி மாவு உருட்ட வெச்சிருவாங்க. அதைக்கூட மன்னிக்கலாம். ஆனா, தண்ணி பிடிக்க சைக்கிள்ல குடத்தைக் கட்டி விடுவாங்க பாருங்க. #பாவம் நாங்க!

அக்கா தங்கச்சிங்களோட இவங்களுக்கு இருக்கிற கெமிஸ்ட்ரி ரணகளம். ‘அது என்னன்னே தெரியலை. உங்க சிஸ்டர்ஸைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு! நாம நல்லா இருக்கிறது அதுகளுக்குப் பொறுக்காது. சினிமாவுக்குப் போனோம்னு சொன்னாக்கூட மூஞ்சி மூஞ்சூறு மாதிரி போகுதுங்க’ எனப் பொளேர் கூட்டுவார்கள். #என்ன டிசைனோ?

ஏழு மணிக்கு மேல் முதல் ரிங்கில் போனை எடுக்கவில்லை என்றாலோ, ரொம்பநேரமாக உங்க போன் என்கேஜ்டு டோனில் பிஸியாக இருந்தாலோ மண்டகப்படிதான். #பீ கேர்ஃபுல். நான் என்னைச் சொன்னேன்!

கடுமையா உழைக்கணும். ஆனாலும் அவங்களுக்காக பெரிய பெரிய சாகசங்கள் பண்ணிட்டே இருக்கணும். குறைந்தபட்சம் பைக்ல ஈஸிஆர்ல ரொம்ப வேகமா பறக்கணும். #யார் வாங்கித் தந்த பைக்?

‘இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?’னு நீங்க முதன்முதலா பப்புள்கம் வாங்கிக் கொடுத்த நாளைக்கூட சொல்லுவாங்க. அதுல பாதியாச்சும் எதிர்பார்ப்பாங்க. ஞாபகசக்திங்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கிற நீங்க பாவம் பாஸ். #என்னாச்சு?

எல்லாத்தையும்விட ‘ஆசையா சமைச்சது’ங்கிற பேர்ல புதுப்புது வஸ்துக்களை உங்களை எலியா நினைச்சு செஞ்சு கொடுப்பாங்க. நல்லா இல்லைன்னாலும் ‘நல்லாவே இருக்கு’, ‘நல்லா மட்டும்தான் இருக்கு’னு புது ரியாக்‌ஷனோட வாழ்த்தணும். இல்லைனா கட்டம் சரி இல்லாமப் போயிடும். #நோ ரியாக்‌ஷன்!

-சரண்ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick