மாத்தி மாத்திப் பேசுறீங்க!

‘பழமொழிகளைக் சொல்லாதீங்கடா நாய்களா’ என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்திலைப் பார்த்துச் சொல்வார். அவர் ஏன் அப்படிச் சொன்னாரென ஆராய்ச்சியில் இறங்கினால்... ஒரு பழமொழிக்குப் பதிலடியாக இன்னொரு பழமொழியும் கிடைக்குது. சில உதாரணங்கள்...

ஓண்ணை இழந்தாதான் ஒண்ணு கிடைக்கும். - அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே.

பல சமையற்காரர்கள் சேர்ந்து செய்தால் கேக்கின் சுவை கெட்டுப் போகும். - பலர் கூடி இழுத்தால் தேர் தானாக நகரும்.

தயங்கி தயங்கி செயல் புரிபவன் வெற்றியை இழந்து விடுவான். - தானத்தில் சிறந்தது நிதானம். பதறின காரியம் சிதறிப்போகும்.

வித்தியாசமான மாற்றங்கள்தான் வாழ்க்கையை சுவையாக்குது. - பழகிய குதிரையை இடையில மாத்தாதே.

சந்தேகம் முடிவல்ல; அறிவின் துவக்கம். - நம்பிக்கைத்தான் சிகரங்களைத் தொடும்.

வாள் முனையை விட எழுதுகோல் வலிமை வாய்ந்தது. - வார்த்தைகளை விட செயல்களுக்குதான் வலிமை அதிகம்.

அடக்கமும் அமைதியும் ஆயிரம் பொன் பெறும். - வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.

எலி வளையாயிருந்தாலும் தனி வளையாக இருக்கணும். - தனி மரம் தோப்பாகாது.

உடையை வைத்தே ஒருவர் யாரென்று சொல்லி விடலாம். - போட்டிருக்கும் அட்டையை வைத்து புத்தகத்தை எடை போடாதே.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. - துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

விடா முயற்சியே வெற்றிதரும். - மணல்ல கயிறு திரிக்க நினைக்காதே.

ஈ ஏறி மலை அசையுமா? - எறும்பு ஊற கல்லும் தேயும்.

குலைக்கிற நாய் வேட்டைக்கு உதவாது. - வாயில்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும்.

உண்மையைச் சொல்லிக் கெட்டாருமில்லை; பொய்யைச் சொல்லி வாழ்ந்தாருமில்லை. - உண்மையைச் சொன்னால் உறவற்றுப் போகும்.

-எஸ்.கதிரேசன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick