அவங்க அப்படித்தான்!

ந்த எதிர்காத்துல சைக்கிள் விடுறவங்களைப் பார்த்திருக்கீங்களா பாஸ்? ஊரே ஒரு விஷயத்தை பாசிட்டிவா சொன்னாலும் இவனுங்க லூஸுத்தனமா வேற மாதிரி சொல்வானுங்க. எப்படி?

‘தனுஷ் ஹாலிவுட்ல நடிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. ஆக்ச்சுவலி ஸ்கேன்டினேவியன்  சினிமால அவரால நடிக்கவே முடியாது!’ #நிறைய உலக சினிமா பார்க்கிறாராமாம்!

‘ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா இசையைவிட சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் மியூஸிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!’ #வித்தியாசமான ஆளாமாம்!

‘பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்காது. கலர்ஸை அப்படியே கலர்ஸா இயல்பா காட்டுறது நம்ம தங்கர்பச்சான் தான்!’ # நீ பார்த்தே?

‘வடிவேலு, கவுண்டமணி ஜோக்லாம் பார்க்கிறப்போ கடுப்பா இருக்கும். எனக்கு ஒய்.ஜி.மகேந்திரா, எஸ்.எஸ்.சந்திரன் ஜோக்ஸ்னா அவ்ளோ இஷ்டம்!’ #கஷ்டம்

‘அழகிரியும், கேப்டனும் கூட்டணி வெச்சு அரசியல்ல நின்னா என் ஓட்டு அவங்களுக்குதான்!’ # பூமாதேவி சிரிச்சிடுவா... எல்லோரும் உள்ளே போயிடுவோம். பரவாயில்லையா?

‘சென்னையில எப்படித்தான் வாழ்றீங்களோ? உவ்வ்வ்வ்வேக்! ஐ லவ் பெங்களூரு!’ #உள்ளூர்க் கிழவி ஒலக அழகி ரேஞ்சுக்கு ஃபீல் பன்ணுதுப்பா. கண்டுக்காதீங்க.

‘விஜயகாந்த் பையன் சண்முகபாண்டியன் ஹேண்ட்ஸம்மாதான் இருக்கார். நல்ல படம் செலக்ட் பண்ணி நடிச்சா அப்பாவை மிஞ்சிடுவார்!’ # ஏய் கிழவி... உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது!

‘லவ் பண்றவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். லவ் பண்றதே அதுக்குத்தான்!’ #உன்னைத்தான் முதல்ல உதைக்கணும்!

‘ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவா இருக்கிறவரா, சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிரா இருக்கப் போறாரு? டாக்டர் ராமதாஸ் மேல களங்கம் கற்பிக்கத்தான் யாரோ அவருக்கு எதிரா சாதிச் சாயம் பூசுறாங்க?’ #ம்ம்ம்ம் பயங்கரம்!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick