எலெக்‌ஷன் வந்தாச்சு!

தேர்தல் நெருங்கும்போது ஊர் உலகத்துல நடக்கிற மாற்றம், முன்னேற்றம், ஏமாற்றம்லாம் என்னன்னா...

நாலரை வருஷத்துக்கு முன்னாடி படிச்சுட்டு துக்கி எறிந்த தேர்தல் அறிக்கையைத் தூசி தட்டி எடுத்து, அதில் இருக்கும் அறிவிப்புகளை அரைவேக்காட்டுத்தனமாக அவசர அவசரமாக நிறைவேற்றுவார்கள்.

போன பொங்கலுக்கு காம்பவுண்ட் சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கலையேனு கவலைப்படத் தேவையில்லை. கட்சிக்காரங்களே சுண்ணாம்பு அடிச்சு, பத்திரமாப் பார்த்துக்குவாங்க.

டீக்கடைக்கு அரசியல் பேசுறதுக்குனே புதுப்புது கஸ்டமர்கள் வருவார்கள். ‘டி.ஆர் தி.மு.க-வில் சேர்ந்தால் பெரும் அரசியல் மாற்றம் நடக்கும்’ எனப் பேச்சிலேயே திகிலூட்டுவார்கள்.

திரும்புற பக்கமெல்லாம் தாரைக் காய்ச்சி ஊத்திட்டே இருப்பாங்க. புதுசா ரோடு போடுறாங்களாமாம். மக்களோட அபிமானத்தை அடையறாங்களாமாம்.

ரோட்டை அடைத்து மேடை போட்டு, ஐந்து தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்குச் செல்ல ஐந்து கிலோ மீட்டர்கள் சுற்றி விடுவார்கள். தலை சுர்ருங்குது...

பொதுக்கூட்ட மேடைகளில் அரசியல்வாதிகள் மைக்கில் எதையாவது உளறிக்கொட்டி கிச்சுகிச்சு மூட்டுவார்கள். இணையத்தில் மீம்ஸ் மழை பொழியும்.

அறிவிக்கப்படாத கழிவறையாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு கட்டடங் களின் மூலை முடுக்குகளில்கூட சுண்ணாம்பு அடித்து சூடம் ஏற்றுவார்கள்.

புதிது புதிதாய்ப் பல கட்சிகள், பேனர்கள், தெருக்களில் முளைக்கும். நீங்கல்லாம் எங்க இருந்துய்யா கிளம்புறீங்க?

தேர்தல் நெருங்கும் சமயங்களில் மட்டும் ஊர் சொர்க்கம் போல இருக்கும். அடுத்து தேர்தல் முடிந்து நான்கே மாதங்களில் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

ஆசைப்பட்டு ஆட்டையைப் போடுறது மட்டுமில்லாமல் ஓட்டையைப் போட்டுப் போயிடுவாய்ங்க...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick