ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ம்ம நாட்ல பல பேர் பஸ்ஸுல, டிரெயின்ல ஏன், நடந்தே போறவங்களாகூட இருப்பாங்க. அதே சமயம் நம்ம நாட்டிலேயே அடுத்தவங்க வண்டியில லிஃப்ட் கேட்டுப் போறதுக்குனே சில பேர் இருக்கத்தான் செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் நன்றி சொல்றதுக்கான காரணம் வந்திருக்கு. இப்போ அப்ளிகேஷனுக்குள்ள போகலாம். ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல ஆயிரத்தெட்டு ‘கால் டாக்ஸி’ சர்வீஸ்கள் இருக்கின்றன. வசதிக்காகப் பயன்படுத்தலாம் என்றாலும் குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கால் டாக்ஸியில் ஏறினால், டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு முழிக்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும். சொகுசாகவும் போகணும், சீக்கிரமாகவும் போகணும் என்றால், அதற்கு ‘தி பைக் டாக்ஸி’தான் ஒரே வழி!

காரில் செல்வதற்கு நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ‘கால் டாக்ஸி’ அப்ளிகேஷனுக்கும், இந்த பைக் டாக்ஸி அப்ளிகேஷனுக்கும் ஆறு வித்தியாசங்கள்கூட கிடையாது. நிற்கும் இடம், செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால், அந்தந்த பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கும் ‘தி பைக் டாக்ஸி’கள் உங்களை டபுள்ஸ் ஏற்றிக்கொண்டு பறக்கும். ஜில்லெனப் பறக்கும் பைக்குகள், டிராஃபிக் ஜாமில் மாட்டிக்கொண்டாலும் குறுக்கே நெடுக்கே செருகிச்சென்று, குறிப்பிட்ட தொலைவை சீக்கிரமே அடைந்துவிட முடியும் என்பது, அப்ளிகேஷனைக் கண்டுபிடித்தவர்களின் கணிப்பு. கால் டாக்ஸியில் நாம் கொடுக்கும் பணத்தைவிட, பைக்கில் செல்ல கொடுக்க வேண்டிய பணம் குறைவுதான். வேலைக்கான நேர்முகத்தேர்வுக்குச் செல்பவர்களுக்கு இது ஆகச்சிறந்த அப்ளிகேஷன் என்கிறார்கள் பயன்படுத்தியவர்கள். வாடிக்கையாளர்களின் நேரம், பணம் இரண்டையும் மிச்சப்படுத்துவதுதான் ‘தி பைக் டாக்ஸி’யின் நோக்கம்.  இப்படி ஒரு ஐடியாவே, ரோட்டில் லிஃப்ட் கேட்டு நிற்கும் ஆட்களைப் பார்க்கும்போதுதான் தோன்றியதாம்!

அப்புறமென்ன? இன்ஸ்டால் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க!

முக்கியமான குறிப்பு : இந்த பைக் டாக்ஸி சர்வீஸ், தற்போதைக்கு ஹரியானா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. விரைவில் இந்தியா முழுக்க ஆரம்பமாகவிருக்கிறது.

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=taxi.baxi.customer

- கூகுள்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick