சினிமா மாரத்தான்!

சினிமா சம்பந்தப்பட்ட இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கண்டுபிடிங்க பார்க்கலாம்...

‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படத்தில் ‘சந்தானம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யார்?

‘அன்னை ஓர் ஆலயம்’ திரைப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

‘குஷி’ திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

சிவா - கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன?

‘ரஜினி முருகன்’ என்ற கதாபாத்திரத்தில் ‘ஒகே ஒகே’ படத்தில் தோன்றிய நடிகர் யார்?

‘ஆர்யா’ திரைப்படத்தின் கதாநாயகன் யார்?

மாதவனுடன் இணைந்து ‘மின்னலே’ திரைப்படத்தில் நடித்த ஹீரோ யார்?

அப்பாஸ், பிரபுதேவா இணைந்து நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன?

‘விஐபி’ திரைப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

ரகுவரன் வில்லனாக  நடித்த ‘பாட்ஷா’ திரைப்படத்தின் ஹீரோ யார்?

‘தளபதி’ படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர் என்ன?

ஃபிரெண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்த நடிகரின் பெயர் என்ன?

விஜய் ஹீரோவாக நடித்த ஆறாவது படத்தின் பெயர் என்ன?

விஷ்ணு கிரிக்கெட் வீரராக நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன?

ஜீவாவுடன் ‘டேவிட்’ படத்தில் இணைந்து நடித்த ஹீரோ யார்?

‘விக்ரம்’ திரைப்படத்தின் ஹீரோ யார்?

‘கமல்’ என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படத்தின் பெயர் என்ன?

‘எங்கேயும் காதல்’ திரைப்படம் தமிழில் பிரபுதேவாவுக்கு எத்தனையாவது திரைப்படம்?

‘3’ திரைப்படத்தின் ஹீரோ யார்?

தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தில் காமெடியனாக நடித்தவர் யார்?

பதில் கண்டுபிடிக்கணும்னு சோறு, தண்ணி இல்லாம உட்கார்ந்து யோசிச்சுட்டு இருக்காதீங்க பாஸ். இந்த ஒவ்வொரு கேள்விக்கான பதிலும், அந்தக் கேள்விக்கு அடுத்த கேள்வியிலேயே இருக்கு!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick