செல்லங்களின் செல்லப்பெயர்!

டிகைகளின் செல்லப்பெயர் அவங்களுக்கும், அவங்களைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் மட்டும்தான் தெரியணுமா என்ன? சொன்னா, நாங்களும் தெரிஞ்சுக்குவோம்ல... என்ற கேள்வியுடன் சில நடிகைகளிடம் பேசினேன்.

ஸ்ரீ திவ்யா:

‘சின்னி கொடுக்கு’னு அம்மா கூப்பிடுவாங்க. நான் பண்ற சேட்டையைப் பார்த்து, ‘உன்னைப் பையன் மாதிரி வளர்த்துட்டோம்’னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. ‘கொடுக்கு’னா பையன்னு அர்த்தம். ஸோ... நான் ‘சின்னி கொடுக்கு’ ஆயிட்டேன்! அம்மா இப்படினா, ஃப்ரெண்ட்ஸ் வேற லெவல். ஸ்கூல் படிக்கும்போது ‘மிஸ்டர் பீன்’ ஷோ அடிக்கடி பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச ஷோ அது. அதனாலேயே என்னை ‘மிஸ் பீன்’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க!

நந்திதா:

நான் ‘பிஸ்கட்’ மாதிரி இருக்கேனாம். அதனால, நண்பர்கள் எல்லோரும் என்னை ‘குட் டே’னு கூப்பிடுவாங்க. முதல் தடவை கூப்பிட்டப்போ முறைச்சுப் பார்த்தேன். அதுக்கு, ‘’ஹேய்... கன்னடத்துல ‘குட் டே’ன்னா மொறைச்சுப் பார்க்குறதுனு இன்னொரு அர்த்தமும் இருக்குல்ல?’னு திருப்பிக் கலாய்ச்சாங்க, சிரிச்சுட்டேன். நான் சும்மா பார்த்தாலே, மொறைச்சுப் பார்க்கிற மாதிரி தெரியும்னு எனக்கும் அன்னைக்குதான் தெரிஞ்சுது.

ஓவியா:

என் ஒரிஜினல் பேரே ‘ஹெலன்’தான். சினிமாவுக்காக ‘ஓவியா’னு மாத்துனாங்களா... இப்போ ஒரிஜினல் பெயரே பட்டப்பெயர் ஆகிடுச்சு! தவிர, ரொம்ப அழகா இருக்கிறதால, என்னை ‘லட்டு’ன்னும் கூப்பிடுவாங்க. அதை என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும்தான் கூப்பிடணும்னு கட்டளை போட்டிருக்கேன்.

ரேஷ்மி மேனன்:

வீட்டுல என்னை ‘பப்பி’னு கூப்பிட்டுக் கடுப்பேத்துவாங்க. ஏன் இப்படினு கேட்டதுக்கு சின்ன வயசுல நீ செம கியூட்டா இருப்பேனு காரணம் சொன்னாங்க. அவங்க நேர்மை எனக்குப் பிடிச்சதனால, சரினு சொல்லிட்டேன். என் ஃப்ரண்ட்டோட பொண்ணு ‘பப்பி’னு சொல்ல வராது. ‘எப்பி’னு சொல்வா. இப்போ, எல்லோரும் என்னை ‘எப்பி’னே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. ‘பப்பி - எப்பி’ ரைமிங், டைமிங் செமையா இருக்குல்ல?

ஐஸ்வர்யா ராஜேஷ்:

என் பெயரைச் சுருக்கி, ‘ஐஸ்’னு கூப்பிடுவாங்களே தவிர, இதுவரை எனக்கு யாரும் பட்டப்பெயர் வைக்கலை. இப்படிக் கேட்டுட்டீங்கள்ல? இப்பவே பல பேர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. சந்தோஷமா?

சிருஷ்டி டாங்கே:

‘சும்மா தெரிஞ்சுக்கிறதுக்குத்தானே கேட்கிறீங்க? யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க. சில பேர் ‘குக்கி’னு சொல்வாங்க. சில பேர் ‘டீனா’னு கூப்பிடுவாங்க. ஆனா, ஏன் இப்படிக் கூப்பிடுறாங்கனு இன்னைக்கு வரைக்கும் தெரியாது. ஆசைப்பட்டு கூப்பிடுறாங்கனு நினைச்சுக்கிட்டு நானும் விட்டுட்டேன்.

நிக்கி கல்ராணி:

ஜில் ஜங் ஜக் மாதிரி... என் பெயரையே நிக், நிக்கி, நிக்குனு ஆளாளுக்கு அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கூப்பிட்டுக்குவாங்க. ஆனா, எங்க அப்பா ரொம்ப ஸ்பெஷலா, செல்லமா ‘நாட்டி’னு கூப்பிடுவார். ஏன்னா, ஒரு தடவை எங்க அக்கா மேல கரப்பான்பூச்சியைப் பிடிச்சுத் தூக்கிப் போட்டுட்டேன். அவ பதறின பதறுக்கு எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிச்சார். அப்போ வெச்ச பேர் அது. அது சரி. பட்டப்பெயர் என்னனு கேட்டீங்களே... என் ஒரிஜினல் பேரு என்னனு இந்த ‘நிகிதா’கிட்ட கேட்டீங்களா?

- பி.எஸ்.முத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick