என்னமோ போங்க கேப்டன்!

ஓவியம் : நன்மாறன்

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய பேட்டி, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. இதுபோல் நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டி அந்த விழாவிற்கு கேப்டன் வந்து பேசினால் எப்படி இருக்கும்?

‘விருது விழாவுக்கு வந்திருக்கும் எனது அன்புகொண்ட கலையுலகைச் சேர்ந்த  சகோதர சகோதரிகளே! சென்னையில இந்த மாதிரி ஒரு விழா எடுக்கணும்னு எனக்கும் ஆசைதான். அதுதான் இந்த விழாவா எடுத்தோம். அதனாலதான்... இந்த விழாவுக்கு எல்லோரையும் வரச்சொன்னோம். ஏன் சொன்னோம் தெரியுமா? சென்னை நேரு ஸ்டேடியத்துல இந்த விழாவை நடத்தலாம். ஆனால், இதை நடத்திய எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.

வர்ற வழியெல்லாம் ரசிகர்கள் நிறையப் பேர் உட்கார்ந்து இருந்தாங்க. அவங்ககிட்ட எல்லாம் சொல்றது ஒண்ணுதான். நீங்க வந்ததுக்கு நன்றி. நன்றிதான் நான். ஆனா, அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன்னா, இப்ப என் பையன் ஹீரோவாகி இருக்கான். வாசிம்கானை நான் எவ்வளவோ தடுத்தேன். இருந்தாலும், இப்போதைக்கு நம்ம சங்கத்துக்கு கடன் இருக்கு. அதனாலதான் எல்லோரையும் இதுக்கு கூப்பிடுறேன். லியாகத் அலிகான்கூட எவ்வளவோ சொன்னார். ஆனாலும், நான் எங்க காலத்துல, நாங்க எல்லாம் வேற மாதிரி ரசிகர்களா இருந்தோம்.

இதையெல்லாம், ஏன் இங்க சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம். என் மனைவி பிரேமலதாகூட பல சமயங்கள்ல இப்படியெல்லாம் சொல்வார். இருந்தாலும், நான் இப்படிப் பேசறது, ரசிகர்கள் திரும்பி பத்திரமா வீட்டுக்குப் போகணும். கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்கும், ஏன் நானும் வீட்டுக்குப் போகணும். ஆனா, என் பையன் தமிழன் என்று சொல், கீழே விழுந்தாப் பல்னு சொல்லலாம்.

நான் அதிகமாப் பேசலை, இந்தக் கட்டடத்தைக் கட்டின விஷாலைப் பாராட்டியாகணும். கார்த்தியையும் பாராட்டலாம். ஆனா, சரத்குமார் நல்லவர். ஏன்னா, ராதிகாகூட நான் நடிச்சு இருக்கேன். ராதாரவி நல்ல நண்பர். ராதாகூடவும் நடிச்சு இருக்கேன். நீங்க இந்த கட்டட விழாவுக்கு வரவேண்டாம்னுகூட சொன்னாங்க. ஆனா, நான் தமிழன். எதுவா இருந்தாலும் தமிழன் என்று சொல், என் மகன் டெல்லியில் இருக்கான். இங்க வரலாம். நான் போகலாம். இப்போக்கூட டெல்லி நல்ல ஊர்தான். இருந்தாலும், நாம் ஏன் கட்டடம் திறக்கிறோம் தெரியுமா? யாருக்காவது தெரியுமா? சண்முகப்பாண்டியன் என்று சொல், தலை நிமிர்ந்து நில், கிச்சன்ல நல்லது நடந்தா, சிக்கனுக்கு கெட்டதா இருக்கலாம். ஆனால், சிக்கன் கெட்டதுன்னு சொல்றாங்க! மக்களே வணக்கம் நன்றி!’

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick