இதுக்குப் படமே பரவாயில்லை!

டம் நல்லா இருக்கு, இல்லைன்னு சொல்லாம கமலை விட குழப்பி சிலர் சொல்லும் விமர்சனங்கள் இருக்கே...

இந்த மாதிரிப் படத்தையெல்லாம் ஈரான்ல எடுத்திருந்தா கொண்டாடி இருப்பாங்க. இங்கே இதோட மதிப்பு யாருக்கும் தெரியறதில்லை. #ஆமா, பல்லு பல கோடி போகும்!

இந்தப் படம் இப்போ புரியாது, இன்னும் 20 வருஷம் கழிச்சுதான் புரியும். #2036-ல எடுக்க வேண்டியதுதானே!

ஜி, இந்தப் படம் எல்லாம் இப்படி உட்கார்ந்து பார்த்தீங்கனா, அதன் உள்ளர்த்தம் உங்களுக்குப் புரிபடாது. #திரைக்குப் பின்னாடி நின்னு பார்க்கணுமோ?

இந்தப் படம் சாதாரண மசாலாப் படம் கிடையாது. #ஸ்பெஷல் மசாலாவா?

இந்தப் படம் எல்லாருக்கும் பிடிக்காது பாஸ். இது வேற லெவல். #வேற லெவல் ஆளுக மட்டும் வரவும்னு போஸ்டர் அடிக்கலாமே!

இந்தப் படம் எல்லாம் சும்மா பார்க்க முடியாது. உங்களோட மனநிலையைத் தயார் செய்துவிட்டுத்தான் பார்க்க வேண்டும். #யோகாவெல்லாம் பண்ணச் சொல்வாங்க போல!

இந்தப் படத்தை எல்லாம் ஒருமுறை பார்த்தால் புரியாது, குறைந்தது மூன்று முறையாவது பார்க்கணும். #காலேஜ் கட் அடிச்சுட்டு படத்துக்கு வந்தா, இங்கேயும் மூன்று முறையா?

உங்களுக்குப் பிடிக்கலை என்பதற்காக படத்தை மோசம்னு சொல்லாதீங்க. #அப்போ எப்படித்தான் பாஸ் சொல்றது?

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick