பேய் பேய் கோ அவே!

ப்போவெல்லாம் சினிமாவுல பேயைப் பார்த்தால் பயம் வருதோ இல்லையோ, அய்யோ பாவம்னுதான் தோணுது. பின்னே...

சுத்தபத்தமா இருந்த ஒரு ஆளைப் பேயா பார்க்கும்போது, சேத்துல முங்கின அர்ஜுன் மாதிரி காட்டுவாங்க. நல்லாத்தானே இருந்தார்னு தோணும்.

ஆபீஸுக்கே சரியா காலையில பத்து மணிக்கு வராத லேட் சுரேஷு, செத்ததுக்கு அப்புறம் மட்டும் சரியா நைட்டு 12 மணிக்கு வருவார்.

‘கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க பாஸ்’ மாதிரி பல ஜீவன்களைப் பார்த்து இருப்போம். ஆனா, அந்த மாதிரி முகங்கள் எல்லாம் சேர்ந்து பயமுறுத்தும்போதுதான், ‘சிரிப்பு வர்ற மாதிரி பயமுறுத்தாதீங்க பாஸ்’னு தோணுது.

தாடி வெச்சுட்டு, அழுக்கு சாமியாரை ‘கற்றது தமிழ்’ ஜீவா மாதிரி சுத்துற ஆள் எல்லாம், உஜாலா போட்டு எடுத்த மாதிரி பளீர்னு, சுத்தமா ஷேவ் பண்ணி பேயா வரும்போது, நாமளும் பேயானா லுக்கா தெரிவோம் போலன்னு தோணும்.

நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டோம் என்பதையே மறக்கும் சஞ்சய் ராமசாமிகள், பேயானதும் சரியா எல்லாத்தையும் ஞாபகம் வெச்சு எல்லாத்தையும் பழிவாங்குவாங்கனு சொல்லும்போது, செத்தா ஞாபகசக்தி வந்துடுமோன்னு தோணும்.

யார்கூடவும் சேராம பேய் ஆகியும் சிங்கிளா சுத்துற சில ஆம்பளைப் பேய்களைப் பார்க்கும்போது, ரொம்பப் பாவமாத் தோணுது பாஸ்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick