சமாதானப் படலம்!

ங்கள் மீது கோபத்தில் பேசாமல் இருக்கும் காதலியைப் பேச வைப்பது எப்படி? முத்தான ஐந்து டிப்ஸ்...

அவங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை எடுத்துக்கிட்டு அவங்க டோன்லேயே அந்த விஷயத்தைப் பற்றி நெகட்டிவா கொஞ்ச நேரம் பேசுங்க. செமையா ட்யூன் ஆகி உங்ககிட்ட அதே டோன்ல பேசுவாங்க. உதாரணத்துக்கு அவங்களுக்கு ஆகாத பொண்ணு ஸ்வேதானு வைங்க. ‘உன் க்ளாஸ்மேட் ஸ்வேதாவை ஃபேஸ்புக்ல பார்த்தேன். பொண்ணா அது. உவ்வேக். இது பின்னாடி எப்படித்தான் பாய்ஸ் சுத்துறாய்ங்களோ?’னு சொல்லுங்க. ‘ஆமா செல்லம்...’ எனக் கோபம் மறந்து அரைமணி நேரம் பேசுவார்கள்.

கோபம் நீடித்தால் தாடி வளர்த்துக்கொண்டு அலையுங்கள். ஆனால், இப்போது அதுவும் ஃபேஷனாகி விட்டதால், தாறுமாறாக வளர்த்தல் நல்லது. இல்லையேல் விளைவுகள் விபரீதமாகி விடும்.

கோபத்தை இரண்டு நாட்களுக்குக்கும் மேலாக நீட்டித்தால் மேட்டர் சிம்பிள். நன்கு ஷேவ் பண்ணி பளிச் ஆடையில் டக்-இன் செய்து ஆளே ச்சும்மா அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளை போலவே வரவும். மறந்தும் பேச முயற்சி செய்யாதீர்கள். ‘ஆத்தீ இவன் வேற ரூட்டுல போறானே?’ என பயந்து கேத்தரின் தெரசாவாக மாறி ‘ஏன் என்னைப் பார்க்க வரலை? உனக்கு என்னைவிட வேற வேலைலாம் முக்கியமாப் போச்சுல்ல?’ எனக் கருணை கோபப்பட்டு உங்கள் மீது காதல் மழை பொழியும் வாய்ப்பு இருக்கிறது.

பற்றற்ற மனநிலையில் குத்து சாங் கேளுங்கள். அப்புறம் என்ன ஆகும்? ஆட்டோமேட்டிக்காக ‘அட, ரொம்ப சந்தோஷமாவா இருக்கே நீ..? இது தப்பாச்சே!’ என்கிற ரீதியில் ‘என் மேல பாசமே இல்லைல. போடா டாக். பன்னி, நாயி, எரும!’ எனத் திட்டிவிட்டு கொஞ்சநேரத்தில் செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.

ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாகி விடுங்கள். குழப்பத்திலேயே ‘என்ன பண்றே, நான் பேசாட்டி பேச மாட்டியா... அதென்ன அந்த ப்ரீத்தாவுக்கு லைக் போட்டு கமென்ட் போட்டிருக்கே, அவ்ளோ கொழுப்பாடா?’ என வான்ட்டடாக கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் நீங்கள் குல்ஃபியாய் உருகி மருகி, ‘இல்லைடி தங்கம், செல்லம், புஜ்ஜு’ போட்டு உலக அழகி ரேஞ்சுக்கு புகழ்ந்தீர்கள் என்றால் சுபம்.

‘கோபத்துலகூட அழகா இருக்கே..!’, ‘ஏன் இவ்ளோ மெலிஞ்சிட்டே’, ‘கன்னம் ஏன் ஒட்டிப்போயிருக்கு?’ என அக்கறை அல்டாப்பு காட்டினால், ‘போடா எல்லாம் உன்னாலதான்டா...!’ எனச் செல்ல சண்டையோடு சில பல குத்துக்களோடு ரொமான்ஸ் மேகங்கள் மூளும் சூழல் உண்டு. ‘நான் எப்படி இருந்தா உனக்கு என்ன? அதான் ஆல் இஸ் ஓவர்னு சொல்லிட்டேனே!’ எனச் சொல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

ஆல் தி பெஸ்ட் மக்களே!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick