ஆல் பர்பஸ் அங்கிள்ஸ்!

ந்த ஆல் பர்பஸ் அங்கிள்ஸ் இருக்காங்களே.... ஃபேஸ்புக்ல அவங்க பண்ணுற அழிச்சாட்டியம் ஓவர் பாஸ். அவங்களை ஈஸியா கண்டுபிடிக்கலாமே ஃப்ரெண்ச்.

ஒரு புள்ள ஸ்டேட்டஸ் போட்ருக்கக் கூடாது. உடனே நரம்பெல்லாம் ‘ரட்சகன்’ நாகார்ஜூனா போல புடைச்சு முதல் ஆளா வந்து ‘சாட்டையடி பதிவு தோழி’னு போட்டு வைப்ரேட் மோடுக்குப் போவாங்க. இதை மன்னிச்சாலும்கூட ‘எங்க வீட்டு தென்னை மரம்’னு சூம்பிப்போன மரத்தைப் போட்ட புள்ளைகிட்டகூட ‘அருமையான பதிவு தோழி’னு போடுவாய்ங்க பாருங்க. ஆஸம் அன் லிமிட்டட்.

சுமாரான போட்டோவை ஒரு பொண்ணு புரொஃபைலா அப்லோட் பண்ணிடக்கூடாதே. உடனே ‘ஹாலிவுட் ஹீரோயின் மாதிரியே இருக்கீங்க’ என ஃபாரீன் அழகியின் போட்டோவைப் போட்டு கமென்ட் பண்ணுவார்கள். கொஞ்சம் சமீபத்திய டச் கொடுப்பதென்றால் ‘நீங்க நடிகை திவ்யா மாதிரியே இருக்கீங்கம்மா’ என வழிவார்கள்.

அந்தப் பொண்ணு எதையோ ஃபீல் பண்ணி அழும் பாப்பாவின் போட்டோவை ஷேர் செய்திருந்தால் போச். ‘கலங்காதிரு மனமே...உனக்காய் இருப்பேன் அனுதினமே’ என கமென்ட் போடுவார்கள். கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ போன்ற ரேஞ்சுக்கு ஃபீல் செய்பவர்களும் உண்டு.

தினமும் குட்மார்னிங் மெஸேஜை மட்டுமே போஸ்ட்டாக போடும்  புள்ள ஒருநாள் ஆப்சென்ட் ஆகி இருந்தால் போச். உள்டப்பியில் போய்...

என்னாச்சு தோழி?’

நலம்தானா?’

காய்ச்சலா?’

டேக் கேர் நல்லா ரெஸ்ட் எடுங்க தோழி’ என சாட்டிங் ஹிஸ்டரியை அனாமத்தாய் நிறைத்து வைப்பார்கள்.

வான்ட்டடாய் நிறையப் பெண்ணியம் சம்பந்தமான விஷயங்களைப் பெண்களின் சுவற்றில் போய் ஷேர் செய்வார்கள். இன்பாக்ஸில் ‘என்ன கொடுமை பார்த்தீங்களா தோழி?’ எனக் கேட்டபடி இருப்பார்கள். வலையில் சிக்கினால் அம்புட்டுதான். இரண்டாவது நாளிலேயே ‘ஏன் இன்னிக்கு சுடிதார் போட்டுட்டு வரலை?’ என்பார்கள். அடுத்த லெவலில், ‘நீ செமையா இருக்கேடி’ என்பார்கள்.

சான்ஸே இல்லை அங்கிள்ஸ்!

-ஆர்.சரண்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick