நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஸ்க்ராட்ச் கார்டில் ஸ்க்ராட்ச் வந்தா ஒண்ணுமே பண்ண மாட்டோம்!

நுரையீரல் பஞ்சு போன்றது...சிகரெட்டும் பஞ்சு போன்றது!

மாதவனை முதலில் மேடி என்றழைத்தது அவரது டாடி!

சிக்கன் ஃப்ரைடு ரைஸில் எக் இருக்கும். எக் ஃபிரைடு ரைஸில் சிக்கன் இருக்காது!

விஜயகாந்திடம் திடீரென ‘நீங்க ரஜினிகாந்தா விஜயகாந்தா?’ எனக் கேட்டால் ரஜினிகாந்த் என்றுகூட சொல்வார்!

25 வயதுவரை முதல் அனுபவத்துக்காக பொறுமை காக்கும் இந்தியன்தான் சிக்னலில் பத்து செகண்ட்கூட நிற்காமல் பறக்கிறான்!

பைக் ஸ்டாண்டில் சென்டர் ஸ்டாண்ட் போடும் பொறுமை இங்கு ஒருவருக்கும் இல்லை!

மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் மாடும் மேயும்!

ஆறாவது லார்ஜில் கிளிக்கி மொழி பேசுவோரின் எண்ணிக்கை 15768798090!

அல்ஜீப்ராவுக்கும் அல்சைமர் நோய்க்கும் நிறைய சம்பந்தம் இருக்கு!

டி.எஸ்.பி போடும் சோக டியூனிலும்கூட ‘டுப்பு டப்பு ஜிப்பு ஜும்... டுப்பு டப்பு ஜிப்பு ஜும்’ கண்டிப்பாக இருக்கும்!

 -சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick