நிறைய ஃபேக் ஐ.டி இருக்கு!

சுஜா வருணி! ‘மிளகா’, ‘சேட்டை’ படங்களில் கிடைத்த சின்னச் சின்ன கேரக்டர்களையும் கிக்காய் செய்து நம் கவனத்தை ஈர்த்தவர். அவரிடம் பேசியதில்...

‘‘ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உங்களுக்கும் கிடைக்கிறதா?’’

‘‘ஹீரோ, ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்னு இங்கே யாரும் யாரையும் பிரிச்சுப் பார்ப்பதில்லை. செட்டுக்கு வந்துட்டா, அத்தனை பேரும் சமம்தான்.’’

‘‘சில படங்களில் சூப்பரா டான்ஸ் ஆடியிருக்கீங்க. உங்களுக்கு யாருடைய டான்ஸ் ரொம்பப் பிடிக்கும்?’’

‘‘விஜய் சார் டான்ஸ் சொல்லவே வேணாம், அட்டகாசம். அதே மாதிரி ராகவா லாரன்ஸ் சார் டான்ஸ் திரும்பத் திரும்ப பார்த்துக்கிட்டே இருப்பேன். சிம்ரன் மேம் டான்ஸுக்கும் நான் தீவிர ரசிகை.’’

‘‘ரொம்ப நாளா உங்களை ஸ்க்ரீன்ல காணோமே... எங்கே போனீங்க?’’

‘‘அந்த கேப் விழுந்ததுக்கு நான் காரணம் இல்லீங்க. என்னுடைய படங்கள் ரிலீஸாகலை. ‘வா டீல்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘அமளி துமளி’, ‘காதல் தீவு’, ‘பென்சில்’னு தமிழில் மட்டும் ஐந்து படம் நடிச்சு முடிச்சிருக்கேன். இந்தப் படங்கள் எல்லாம் மொத்தமா லாக் ஆகிடுச்சு. ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகளைக் கொண்டது. இதெல்லாம் ரிலீஸானதும் சுஜா சூப்பரா நடிச்சிருக்காங்கனு எல்லோரும் பாராட்டுவாங்க. எனக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும். அந்த நம்பிக்கை இருக்கு.’’

‘‘உங்க பெயரில் நிறைய ஃபேஸ்புக் ஐ.டி இருக்கே?’’

‘‘அதை ஏன் கேட்குறீங்க. ஏகப்பட்ட ஐ.டி இருக்கு. ஆனா நிஜத்தில் நான் ஃபேஸ்புக் பக்கம் போனதே கிடையாது. என் பெயரில் இருக்கும் இந்த ஐ.டிக்கள் என்னை நல்லா என்கரேஜும் பண்ணியிருக்கு, பயங்கரமா டேமேஜும் பண்ணியிருக்கு. சரி இந்தப் பிரச்னைக்கு நாமளே ஒரு முடிவு கட்டுவோம்னு சுஜா வருணீன்னு என் உண்மையான பெயரில் நானே போன வாரம் பேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. நிறைய லைக்ஸ் வருது. டீசன்டான கமென்ட்ஸும் வருது.’’ 

நான் பேஜைக் கண்டுபிடிச்சு லைக் போட்டுட்டேன் பாஸ்!

-ஜுல்பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick