இது இணையத் தமிழ்!

சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் பல, இன்னமும் அகராதியில் சேர்க்கப்படாதவை.

சிரிப்பான்கள் (சிரிப்பா இருக்காம்)

ரோபுல் மேக்ஸ் (ரொம்ப ரொம்ப சிரிப்பா இருக்காம்)

விபுசி (விழுந்து புரண்டு சிரிக்கறாங்களாம்)

பாறைகள் (பாராட்டுறாங்களாமாம்!)

சப்தமேகம் (சவுண்ட்கிளவுடைத்தான் அப்படிச் சொல்றாங்க)

துப்பான்கள் (காறித் துப்புற மாதிரி இருக்காம்)

வாய் பொத்தி சிரிக்கும் குரங்கு (இதுக்குப் போய் இப்படி எழுதறானுங்க பாஸ்)

நீ குழாய் (யூ டியூபை எப்படி எழுதறாங்க பாருங்களேன்)

ப்ரெண்ட்ச் (ஃப்ரெண்ட்ஸ்தான் பாஸ்)

இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்குங்க பாஸ். இல்லாட்டி பல பிரச்னைகள் வந்து சோற்றுக்கே பஞ்சம் வரலாம்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick