விளம்பர இடைவேளை!

சில விளம்பர வசனங்கள் நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு ‘பக்காவாக’ பொருந்தும். நீங்களே பாருங்களேன்...

ஜெயலலிதா - நான் அம்மாவா மாறினேன்.(அதுதான் எப்பனு தெரியல...)

விஜயகாந்த் - நாக்கை நாட்டியமாடச் செய்யுமே...( ஆமாம் பாஸ், அவர் பேசுறது நாலஞ்சு இடியாப்பத்தைக் கொசகொசனு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே இருக்கு)

சரத்குமார்உருவாக்கிடுமே புதிய எண்ணங்களை.(உருவாகும் எண்ணங்கள் உருப்படி இல்லாம செஞ்சு விட்ருது)

ஸ்டாலின் - இப்போ எதுக்கு டென்ஷன்? (‘கோப்படுங்கள்... கோபப்படுங்கள்’னு அலறாதீங்க ப்ளீஸ்)

மக்கள் நலக் கூட்டணி - இது தங்கமான உறவு.(ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு...)

சீமான் - வாய்க்குப் போடுமே பூட்டு. (வாயைத் திறந்தால் கத்துறார், இல்லை திட்டுறார்)

மோடி - ஐ ஃபீல் அப். (அப்லேயே ஆகாசத்துலேயேதான் இருக்காப்ல... தரையிறங்கவே மாட்றாப்ல)

அழகிரி - க்ளியரா இரு (ஸ்டாலினைக் கலாய்க்கணும்கிறதில் மட்டும் ரொம்ப க்ளியரா இருக்காப்டி)

அன்புமணி - என் பேரேதான், என் கையெழுத்துதான்.(அன்புமணியாகிய இவர் வாரத்துக்கு ஒருமுறை போஸ்டர் அடிப்பார்)

ஓ.பி.எஸ் - நான் வளர்கிறேனே மம்மி...(‘புலி பதுங்குறதே பாயுறதுக்குத்தான்’னு மனுஷனை வெச்சு செய்றாய்ங்க)

கலைஞர் - கிட் கேட் பிரேக் கண்டிப்பா தேவை.(நான் ஒண்ணும் சொல்லலைங்கோ...)
 

வைகோ - எனது அடிகளைக் குறித்த உங்களது பெருமை. எனது காலடிகள் எனது செப்பல். (‘எல்லாச் சாலைகளும் ரோமைச் சென்றடைகின்றன’னு கண்டுபிடிச்சு சொன்னதே இவர்தான்)

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick