துக்கம் தொண்டையை அடைக்குது!

‘நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழ்கிறோம்’னு ஒருநாள் உப்புமா சாப்பிட்டு இருக்கும்போது விரக்தியில் யோசித்ததில் பல திடுக்கிடும் விஷயங்கள் தொண்டையைக் கவ்வ...இதோ கட்டுரை!

‘பத்து ரூபாய் கொடுத்து வாங்குறேன். பாலைவிட தண்ணி அதிகமா இருக்குனு’ டீக்கடைக்காரன்கிட்ட சண்டைக்குப் போவோம். ஆனால், நம்ம வீட்டு வாசலில் கன்னுக்குட்டி நின்னா, தண்ணி ஊத்தித்  விடுவோம். ஆஹா...

ரோட்டுக் கடையில் ‘உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்’ எனப் பேரம் பேசுவோம். ஆனால், ரீசார்ஜ் கார்டுகளுக்கு ஒரு ரூபாய் அதிகம் வைத்து விற்றால் ‘ஏன், எதுக்கு?’னு வாய் பேசாமல் வாங்கிவிடுவோம்.

உலகின் எந்த மூலையில் எந்தச் சம்பவம் நடந்தாலும் ‘ஃபீலிங் ஸேட்’ என ஸ்டேட்டஸ் தட்டி ஃபில்டர் மாத்துவோம். ஆனால், நம் பக்கத்து ஊரில் நடந்த பிரச்னை என்னனே நமக்குத் தெரியாது. ‘ஃபீலிங் ஸேட்’!

நாம கனவு கண்ட, ஆசைப்பட்ட படிப்பை நம்ம குழந்தைகளை படிக்கவெச்சு அவங்க கனவில் சாம்பலை அள்ளிப் போடுவோம். அப்புறம், வேலை கிடைக்கலைனு குத்திக்காட்டி அன்னக்கரண்டியாலேயே அடிப்போம்.

மிக துக்கமான செய்தி ஏதேனும் ஃபேஸ்புக்கில் ஷேர் ஆகியிருந்தால், கமென்டில் கொஞ்சம்கூட கல்லீரலே இல்லாமல் ‘இலவச ரீசார்ஜ்’ கமென்ட் போடுவோம். கம்பியைப் பழுக்கக் காய்ச்சி கட்டைவிரலில் இழுத்துவிடணும்.

ஏதோ ஒரு பங்களாதேஷ்காரன் தோனி தலையை வெட்டின மாதிரி மீம் போட்டால் ‘கிரிக்கெட்டை கிரிக்கெட்டா பாருங்கடா... நொன்னைகளா’ என நியாயம் பேசுவோம். ஆனால், கோஹ்லி அவுட் ஆனதுக்கு அனுஷ்கா ஷர்மாவைக் காரணம் சொல்வோம்.

பக்கத்துவீட்டு மரத்தின் இலைகள் நம் வீட்டில் விழுந்தால்கூட அதே மரத்தில் அவன் தூக்கு மாட்டித் தொங்கும் அளவுக்குக் கேள்வி கேட்போம். ஆனால், நாம் நடுரோட்டில் எச்சில் துப்புவோம், உற்சாகமாக உச்சாவும் அடிப்போம்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் சப்ஸ்டியூட்டாக விளையாடுகிறவன் பெயரைத் தெரிஞ்சு வெச்சுக்குவோம். ஆனால், நமது நாட்டுக் கால்பந்து அணியின் கேப்டன் பெயரைக் கேட்டால் திருதிருனு முழிப்போம். யாருய்யா அவரு?

‘தனி ஒருவன்’ படம் பார்த்து ‘ஜெயம்’ ரவி மாதிரி நாட்டுக்கு நல்லது செய்ய யோசிக்க மாட்டோம். மாறாக அர்விந்த் சுவாமி ஆக்டிங்கில் அட்ராக்ட் ஆகி ‘ஐ யம் நாட் பேட், ஜஸ்ட் ஈவில்’னு தீய சக்தியா மாறிடுவோம். பிம்பர பிம்பர பிம்பர பூம்...

ஆங்கிலத்தில் கரும்பச்சையாகத் திட்டினாலும் கண்டுக்காமல் பல்லைக் காட்டுவோம், இதே தமிழில்  ‘லூசு’னு திட்டினாலும் பல்லைக் கடித்துக்கொண்டு முதுகில் நங்கு நங்குனு குத்துவோம்.

இன்னும் இது மாதிரி எத்தனையோ இருக்கு... யோசிச்சுப் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்.. உங்களுக்கும் தொண்டையைக் கவ்வும்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்