மாத்தி மாத்தி விளையாடலாமா?

ல்யாண் ஜூவல்லர்ஸுக்குள் போனால் அம்மா பொண்ணா மாறுறதும் பொண்ணு அம்மாவா மாறுறதும் சகஜம்தான். இதை வாய்ப்பாக வைத்து யார் யாரை எப்படி எப்படி மாற்றலாம் பாஸ்..? வாங்க சொல்றேன்.

ஓ.பி.எஸ்ஸை அம்மாவாகவும் அம்மாவை ஓ.பி.எஸ்ஸாகவும் மாற்றலாம்.

கேப்டனை பாகிஸ்தான் தீவிரவாதியாகவும் பாகிஸ்தான் தீவிரவாதியை அர்ஜூனாகவும் மாற்றலாம்.

தலயை தளபதியாகவும் தளபதியை தலயாகவும் மாற்றலாம்.

எம்.எஸ்.பாஸ்கரை ரஜினியாகவும் அல்வா வாசுவை கமலாகவும் மாற்றலாம்.

எஸ்.ஏ.சியை அமிதாப்பச்சனாகவும் அமிதாப்பச்சனை நிரந்தரமாக சிவாஜியாகவும் மாற்றலாம்.

விஷாலை சரத்குமாராகவும் சரத்குமாரை அப்துல்கலாமாகவும் மாற்றலாம்.

சிம்புவை அனிருத்தாகவும் அனிருத்தை அர்னால்டாகவும் மாற்றலாம்.

ஸ்டாலினை அழகிரியாகவும் அழகிரியைக் கலைஞராகவும் மாற்றலாம்.

பிரபுதேவாவை விக்னேஷ் சிவனாகவும் விக்னேஷ் சிவனை நயன்தாராவாகவும் மாற்றலாம்.

மிஷ்கினை டகேஷி கிட்டானோவாகவும் டகேஷி கிட்டானோவை தங்கர் பச்சானாகவும் மாற்றலாம்.

சந்தானத்தைக் கவுண்டமணியாகவும் கவுண்டமணியை செந்திலாகவும் மாற்றலாம்.

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick