எவ்ளோ அட்டகாசம் பண்றோம்!

ஸ்கூலும் சரி, காலேஜும் சரி, ஏன் வேலை பார்க்கும் ஆபீஸும் சரி... அன்பின் அடையாளமாக நமக்குக் கொடுக்கும் அடையாள அட்டை என்னும் இந்த ‘ஐ.டி கார்டு’ நாம் ஏங்கும்போது தாயாகவும், தூங்கும்போது பாயாகவும், நம்மகூடவே இருக்கும், அதோடு நாம் செய்யும் சேட்டைகளின் தொகுப்பே இது! 

ஸ்கேல் இல்லை என்று அதில் கோடு போடுவது.

பேன்ட் பாக்கெட்டில் இருந்து குதிரைவால் போல் தொங்கவிடுவது.

வருஷம் ஆக ஆக, அதில் இருக்கும் நம் மூஞ்சைப் பார்த்து, இப்போது இருக்கும் நம்மோடு கம்பேர் பண்ணி பூரிப்பு அடைவது.

ஐ.டி கார்டுக்குப் பின்னால், பரீட்சை நேரத்தில் மைக்ரோ பிட்டு வைத்து எடுத்துச் செல்வது.

பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் போனால், ஐ.டி கார்டை கழுத்தில் மாட்டியபடியே தூக்கிப்போட்டு விளையாடுவது.

லஞ்ச் பெல்லுக்கு முன்னாடி, பசி மயக்கம் தாங்காமல் வாயில் கவ்வியபடி உட்கார்ந்திருப்பது.

வயசுக்கேற்ற விளையாட்டு இல்லை எனத் தெரிந்தும், ‘பவர் ரேஞ்சர்ஸ்’ மார்ஃபர் போல் நண்பர்களிடம் அடிக்கடி தூக்கிக் காண்பிப்பது.   

‘என்னைப் பார் யோகம் வரும்’ங்கிற மாதிரி, சட்டையோடு ஒரு க்ளிப்பைப் போட்டு, நம் அழகு முகம் தெரியும்படி ஸ்டெடியாக மாட்டி விடுவது!

- மு.சித்தார்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick