போடுங்கம்மா ஓட்டு!

லெக்‌ஷன் வந்துடுச்சு. எல்லா அரசியல்வாதிகளும் அவங்கவங்க சின்னங்களை மக்கள் மனசுல பதிய வைக்கிற வேலையில் மும்முரமா இருக்காங்க, அதை விட்ருவோம். நம்ம சினிமா நட்சத்திரங்கள் திடீர்னு கட்சி ஆரம்பித்தால் என்ன சின்னம் வைத்துக்கொள்வார்கள்னு வேற ஐடியா கிடைக்காததால், உட்கார்ந்து யோசித்தபோது...

அஜித் - துப்பாக்கி (பெரும்பாலும் அதைத்தானே தூக்கிட்டுத் திரியறாப்புல...)

விஜய் - புலி (டி.ஆரைக் கூப்பிட்டு பிரசாரம் பண்ண வெச்சா, நாலு எலெக்‌ஷனுக்குத் தாங்கும்.)

சிம்பு - பிளாஸ்திரி (வாயிலே ஒட்டிக்கிட்டால், சின்னத்தைப் பிரபலமாக்கினது மாதிரியும் ஆச்சு. வாய்க்கு பூட்டுப் போட்டது மாதிரியும் ஆச்சு)

தனுஷ் - சிகரெட் (சட்டையைக் கழட்டி, சிக்ஸ்பேக்கைக் காட்டிட்டே சிகரெட் அடிச்சுட்டு வர்ற மாதிரி போஸ் கொடுத்தால் ஓட்டு குவியும்)

கமல் - ராக்கெட் (ராக்கெட்டை இரண்டு கையில பற்ற வெச்ச அழகே அழகு. மக்களின் அபிமான முதல்வர் ஆகிடலாம்)

விஷால் - சுமோ (அதன் பேனட்டில் உட்கார்ந்து ஊர் ஊராய்ப் பறந்து பறந்து பிரசாரம் பண்ணினாலே போதும்)

காஜல் அகர்வால் - உப்பு (உங்க சோத்துல உப்பு இருக்கா? அப்போ உப்பு சின்னத்துல ஓட்டு போடுங்கனு ஆவேசமாப் பிரசாரம் பண்ணலாம்)

அதர்வா - தேயிலை (தேயிலைத் தோட்டத்துல அடி வாங்கியதுக்காக காட்டிய கருணையில்தான் தப்பிச்சுட்டு இருக்கார்)

சூர்யா - ட்ரம்பட் (ரபபப...பாபபா...)

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick