ஆட்டம்னா ஆட்டம்!

மிழ் சினிமாவில் டான்ஸிங் மகாராஜாக்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் சிலர் போட்ட வித்தியாசமான ஸ்டெப்களின் கொலவெறி ரசிகன் நான். (சாம் ஆன்டர்சன் உட்பட) இதோ அந்த டான்ஸ் ஸ்டெப்களின் அணிவகுப்பு! (நெஞ்சு வலிச்சா டைம்பாஸ் பொறுப்பல்ல)

‘பாண்டியன்’ படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு, இளையராஜாவின் வாரிசு கார்த்திக் ராஜா, ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...’னு செம பாட்டு ஒண்ணு போட்டிருப்பார். தம்பிள்ஸை கையில வெச்சு நெஞ்சுல தொட்டுத் தொட்டு எடுக்கிற மாதிரி செம ஸ்டெப் போட்டிருப்பார் பாருங்க. ஆஸம் ஆஸம்.

‘புதிய பறவை’ படத்தில் மனசாட்சியின் குரலாக நடிகர் திலகம் ஸோலோவாக இருட்டு மேடையில் செம டான்ஸ் ஆடி இருப்பார். அந்நாளில் அவரின் காஸ்ட்யூமுக்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏனென்றால் இந்த மென்மையான சுற்றிச்சுற்றி ஆடும் நடன அசைவால்தான்.

இதுவும் நடிகர் திலகம் ஸ்டெப்தான். 1975-ல் ரிலீஸான ‘பாட்டும் பரதமும்’ படத்தில் ‘சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்..?’ என ஜெயலலிதாவுக்குப் போட்டியாக சிவாஜி ஆடுவார். ஒவ்வொரு ஸ்டெப்புமே தாறுமாறு தக்காளிச்சோறுதான்.

‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்தில் ‘மூக்குத்தி முத்தழகு’ என்ற பாட்டில் நம்ம கேப்டன் போடும் ஸ்டெப்கள் எல்லாமே காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.

‘முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ்- ஊர்வசி ஆடிப்பாடும் ‘அந்தி வரும் நேரம்’ பாடலின் டான்ஸ் மாஸ்டர் நிச்சயம் அதற்கு முன் ஸ்கூல் ட்ரில் மாஸ்டராய் இருந்திருக்க வேண்டும். அப்படியே கைகளை, காலைத் தூக்கி மடக்கி என சிம்பிளாய் அசத்துவார்கள்.

‘மன்னாதி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர்-பத்மினி போட்டி நடனப்பாடல். எம்.ஜி.ஆர் ஆடும் ஒவ்வொரு ஸ்டெப்புமே உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய நாம் செய்ய வேண்டிய முக்கியமான உடற்பயிற்சிகள்.

‘ஒரு ஓடை நதியாகிறது’. ஸ்ரீதர் டைரக்‌ஷனில் இப்படி ஒரு படம் நம்ம ரகுவரன் சார் ஹீரோவா நடிச்சு 1983-ல ரிலீஸ் ஆகி இருக்கு. ‘தென்றல் என்னை முத்தமிட்டது...’ என்ற பாடல் செம ஹிட். பாட்டுக்கு அவர் போட்டிருக்கும் அதிரிபுதிரி ஸ்டெப்ஸ் பார்த்து இப்போதும் வியக்கேன்.

கட்டக்கடைசியா நம்ம டி.ஆர் டான்ஸ். ‘வீராசாமி’ படத்தில் மும்தாஜோடு போட்டிருப்பாரே ஒரு டூயட் டான்ஸ். டண்டனக்கா டண்டனக்கா!

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick