ஃபேக் ஐ.டி கண்டுபிடிப்பது எப்படி?

னு, பூஜா, பிரியா, கவிதா இதுல ஏதாவது ஒண்ணுதான் ஐ.டி பெயரா இருக்கும்.

அந்த ஐ.டி-க்களில் இருந்து நமக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரும்.

ப்ரொஃபைல் பிக்சர்களில் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, காஜல் அகர்வால் படங்கள் இருக்கும்.

ஃப்ரெண்ட்ஸ் 4,500 பேருக்கு மேலேயும் மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் நூற்றுக்கணக்கைத் தாண்டும்.

பிறந்த வருடம் 1993. ஃபீமேல், இன்ட்ரஸ்டட் இன் மென், பிரபல லேடீஸ் காலேஜ் பெயர் போன்ற எல்லா விபரங்களும் நம்புவது மாதிரி பக்காவா இருக்கும்.

நம்முடைய மெசேஜுக்கு உடனுக்குடன் ரிப்ளை வரும். நம்பர் கேட்டால், நம்பர்லாம் வேணாமே... சாட்டிங்கிலேயே பேசலாமேனு பதில் வரும்.

ரோஜாப்பூ, மெஹந்தி வெச்ச கை, தாஜ்மஹால், இந்த மாதிரி போட்டோக்கள் அடிக்கடி அப்லோட் ஆகும். நமக்கும் டேக் செய்யப்படும். அவை அசால்ட்டா 400 லைக்ஸ்களைத் தாண்டும். எல்லாப் பயலுங்களும் நைஸ் தோழி, ஆஸம்னு பராட்டுவாங்க.

இந்த போட்டோவில் நான் யாருனு கரெக்டா சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்னு கூகுள்ல இருந்து எடுத்த ஒரு குரூப் போட்டோவைப் போட்டு நமக்கு டெஸ்ட் வைக்கப்படும்.

‘சாப்புட்டியா செல்லம்’னு பெத்த தாயைவிட நம்மைப் பற்றி அதிகம் கவலைப்படுவது.

இப்படி கொஞ்ச நாளைக்கு பயங்கர ஆக்டிவா இருக்கும் இந்த ஐ.டி-க்கள், அப்புறம் லோ வோல்டேஜ் மாதிரி அப்பப்போ மட்டும் பச்சை லைட் எரியும்!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick