ஹன்சிகாதான் அடுத்த மதன்பாப்!

ன்னும் எத்தனை நாளைக்குதான் அடுத்த சூப்பர் ஸ்டார் யாருன்னே அடிச்சுக்கிட்டு கிடக்கிறது. மற்ற நடிகர்களுக்கும் கொஞ்சம் மரியாதை செலுத்துவோம் பாஸ்...

ஷங்கர் படத்துல நடிக்கிறது, சம்மர் ஷாட் அடிக்கிறது, சங்கடமே படாம மொக்கைப் படங்களில் நடிக்கிறதையெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது பரத் தான் அடுத்த பிரசாந்த்.

படத்துக்கு படம் சிரிச்சு சிரிச்சே ஒப்பேத்துவதை வெச்சுப் பார்க்கும்போது ஹன்சிகாதான் அடுத்த மதன்பாப்னு நினைக்கிறேன்.

‘ஆ...ஊன்னா துப்பாக்கியைத் தூக்கிடுற பழக்கம் அஜித்தை அடுத்த ஜெய்சங்கரோனு நினைக்க வைக்குது.

‘டபுள் மீனிங் வசனங்களை டபுள் பேரல் துப்பாக்கியில் நிரப்பினாப்புல சுத்திக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கும்போது ‘நண்டு’ ஜெகன்தான் அடுத்த வெண்ணிற ஆடை மூர்த்தியாக இருப்பார்னு நினைக்கிறேன்.

எந்த சீசன் வந்தாலும் தாடியுடனே சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் சசிகுமார்தான் அடுத்த மணிவண்ணன் என நினைக்கிறேன்.

ஹேர்-ஸ்டைலைக்கூட மாற்றாமல் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டதைப் பார்க்கும்போது விமல்தான் அடுத்த விஜய்யா இருப்பாரோனு நினைக்கிறேன். விமல் ரசிகர்கள் இதைப் பெருமையா சொல்லிக்கலாம்.

படத்துல அடிக்கடி சட்டையைக் கழட்டி சகட்டுமேனிக்கு ஆர்ம்ஸை முறுக்கிக் காட்டுவதால் சூர்யாதான் அடுத்த சரத்குமாராக வாய்ப்பு இருக்கு.

அழுவுற காட்சிகளில் பிரமாதமாக பெர்ஃபார்மன்ஸ் பண்ணுவதை வைத்துப் பார்க்கும்போது ஸ்ருதிஹாசன் தான் அடுத்த கலைராணியா இருப்பாங்களோனு பயந்து வருது

சமீபகாலமாகவே, அடிக்கடி நாட்டைக் காப்பாற்றும் கதாபாத்திரங்களில் நடித்துவருவதால், ‘ஜெயம்’ரவி அடுத்த அர்ஜுனாக அதிக வாய்ப்பிருக்கிறது.

சைக்கிள் கிக், அப்பர் கிக்னு கையை உபயோகிக்காமல் காலை வைத்தே காவாலிப் பசங்களைத் துவைத்து எடுப்பதையெல்லாம் பார்க்கும்போது விஷால்தான் அடுத்த விஜயகாந்த்னு நினைக்கிறேன்.
 

இதே மாதிரி அடுத்த ஜோதிலெட்சுமி, அடுத்த வினுசக்கரவர்த்தி என நிறையப் பேர் இருக்காங்க. அதை அப்பாலிக்கா சொல்றேன்...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick