என்ன பிழைப்புடா இது!

ன்ன வேலைடா இதுனு உங்களுக்கு எப்பவாவது தோன்றி இருக்கிறதா? எப்பவுமே அப்படித்தான் தோணுதுன்னா, வேற வழியில்லை பாஸ். உலகத்துல நோகாம நோம்பி கும்பிடுதல்னு சில வேலைகள் இருக்கு. அப்படி இருக்கிற ஜாலி வேலைகள்...

கரடியை சந்தோஷமா வெச்சுக்கணும். இதுதான் பாஸ் வேலை. நிஜக்கரடிதான் ப்ரோ. ஆனா பெரிய கரடி இல்லை. குட்டி பாண்டா கரடிகள். சீனாவின் பாண்டா பாதுகாப்பு மையத்தில்தான் இந்த வேலை. குட்டிக் கரடிகளை சந்தோஷமா வெச்சுக்கணும். கரடிக்கு ஆயாவா இருக்கணும்கூட சொல்லலாம். சம்பளம் சுமார் 15 லட்சம்தானாம். மேற்படி ஊக்கத்தொகை வேற தர்றாங்களாம்!

இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் 27 வயதான ராய்சின் மேடிகனுக்கு கட்டிலில் படுத்துத் தூங்கி அதன் தரம் பற்றிச் சொல்வதுதான் வேலையாம். காலை பத்து மணி முதல், மாலை ஆறு மணி வரை நிறுவனத்தின் ஷோரூம்களில் இருக்கும் கட்டில்களில் படுப்பதுதான் வேலையாம். அப்புறம் என்னன்னு கேட்கறீங்களா? 1000 யூரோ சம்பளமாம் இந்த வேலைக்கு!

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் வித்தியாசமான ஒரு வேலையை அறிவித்து இருந்தது. சுமார் 25,000 பேர் விண்ணப்பித்து இருந்த வேலையில், இறுதியாக ஐவானிக்கி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். நாசா தரும் கட்டிலில் 70 நாட்கள் தொடர்ச்சியாக படுத்துத் தூங்க வேண்டும். அந்த அறையைவிட்டு வெளியே செல்ல முடியாது. இதற்கு ஐவானிக்குக்கு பேசப்பட்ட சம்பளம் 10 லட்சம் ரூபாய்தான்!

சுவற்றில் பெயின்ட் அடித்ததும் என்றாவது அது காயும்வரை உட்கார்ந்து பார்த்து இருப்போமா? அப்படிப் பார்ப்பதும் ஒரு வேலையாம். ஆனால் இங்கு இல்லை, இங்கிலாந்தில். பெயின்ட் காய்ந்ததும் அது விழுகுதா இல்லை அப்படியே ஒட்டியிருக்குதான்னு வேற டெஸ்ட் பண்ணிச் சொல்லணுமாம். இதற்கு வெளியில் சொல்ல முடியாத அளவு சம்பளமாம்!

காமிக்ஸ் புத்தகத்தில் எல்லாம் கடற்கன்னி பற்றி படித்து இருப்போம். அமெரிக்காவுல சுமார் 1,000 பேர் கடற்கன்னியாக வேலை பார்க்கிறார்களாம். 22 கிலோ எடையிலான மீன் வாலை மாட்டிக்கொண்டு தண்ணியில் மிதக்கணும். இதான் பாஸ் வேலை. ஆரம்பத்தில் ஒருமணி நேரத்துக்கு 1,800 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்கள், இப்போது ஹாலிவுட் பிரபலங்களான ஜெஸ்ஸிகா அல்பா, ஜஸ்இன் டிம்பர்லேக்  போன்றவர்களின் வீட்டு விழாக்களில் பல லட்சம் ரூபாய்க்கு மிதக்கிறார்களாம்.

இதே மாதிரி சாக்லேட் சுவை நல்லா இருக்கான்னு சொல்ற வேலை, காண்டம் நல்லா வேலை செய்யுதானு சொல்ற வேலைன்னு பலதரப்பட்ட வேலை இருக்காம் பாஸ்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick