சூப்பர் ஹீரோயின்!

கே பைக், கனடா நாட்டைச் சேர்ந்த 28 வயது இளம்பெண். உடல் ஓவியக்கலைஞரான கே ஓவர் நைட்டில் ஒபாமா அளவுக்குப் பிரபலமாகியுள்ளார். அம்புட்டுக்கும் காரணம் கே தனது உடலில் வரைந்துகொண்ட இந்த சூப்பர் ஹீரோக்கள் ஓவியம்தான். அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், ராபின், ஷி ஹல்க், டெட்புல் மற்றும் இன்னும் பல காமிக்ஸ் ஹீரோக்களை யும், வில்லன் களையும் ஓவியமாகத் தன் உடலில் வரைந்துள்ளார். ஒரு கதா பாத்திரத்தை வரைய 12-ல் இருந்து 15 மணி நேரங்கள் ஆகுமாம். இதற்காகவே பிரத்யேக பெயின்ட்களையும் கே பயன்படுத்தி வருகிறார். கே தன் உடலின் மேல் பகுதியில் மட்டுமே வரைகிறார். அதற்கே கதாபாத்திரங்களைப் பொறுத்து 80-ல் இருந்து 150 டாலர்கள் வரை செலவாகிறதாம்.

‘நான் சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்துதான் உடல் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். ஓவியத்திறன் எனக்கு முதலிருந்தே இருந்ததால் எளிதில் கற்றுக்கொண்டுவிட்டேன். மக்களும் என்னிடம் அவர்கள் விரும்பும் கதாபாத்திரங்களை வரையச் சொல்லி பரிந்துரைப்பார்கள். என்னிடம் யாராவது ஓர் ஓவியம் வரைய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள் எனக் கேட்டால், நான் எவ்வளவு நேரம் வரைந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ அவ்வளவு நேரம் என்று சொல்வேன். தத்ரூபமாக ஓவியத்தைத் தீட்டுவது மிகவும் சவாலானது. ஆனால், அதை நான் மிகவும் விரும்பிச் செய்கிறேன்’ என்கிறார். கே பைக்குக்கு இன்ஸ்டாகிராமில் 90,000 ஃபாலோயர்கள் உள்ளனர். அம்மோவ்...

நான் எல்லாம் வெறித்தனமான சூப்பர் ஹீரோ பைத்தியம் பாஸ். ஒரு ஸ்பைடர் மேன் டிரெஸ் வாங்க நாயா அலைஞ்சது எனக்குதான் தெரியும். இந்த ஐடியா முதல்லயே தெரிஞ்சுருந்தா யூஸ் பண்ணியிருப்பேனே...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick