அனிமேஷன் மேக்கப்!

ப்போதெல்லாம் பிரபலம் ஆவது மிகவும் சுலபம் பாஸ். கொஞ்சமாய் மெனக்கெட வேண்டும், எதையாவது வித்தியாசமாய்ச் செய்ய வேண்டும்; ஆனால் ரசிக்கும்படி செய்ய வேண்டும். அம்புட்டுதான்!

லிட்டில் மெர்மைட், மூலன் போன்ற எல்லா அனிமேஷன் கதாபாத்திரங்களும் இப்போது மலேசியாவில் இருக்கும் சரஸ்வதிக்கு அத்துபடி. திருமணங்களில் மணப்பெண்ணுக்கு மேக்-அப் போட்டுக்கொண்டிருந்த சரஸ்வதி, ஜாலியாய் ‘ஃப்ரோசென்’ படத்தில் வரும் அனிமேஷன் கதாபாத்திரம் போல் மேக்-அப் செய்து போஸ் தர, இணையத்தில் வைரல் ஆனது.

மேக்-அப் மூலமாகத் தன் முகத்தை அனிமேஷன் கதாபாத்திரமாக மாற்றுவதில் சரஸ்வதி கில்லி. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இன்ஸ்டாகிராமில் புதிதாக 1.5 லட்சம் பேர் சரஸ்வதியை ஃபாலோவியிருக்கிறார்கள். அனிமேஷன் படங்கள் என ஆரம்பித்து, தற்போது சூப்பர்மேன், அயர்ன்மேன், ஜோக்கர் என சூப்பர் ஹீரோ மேக்-அப்களையும் போட ஆரம்பித்துவிட்டார். சூப்பர் சரஸ்வதி!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick