முதன் முதலாய்...

ரைத்த மாவையே அரைத்த திரைப்பட மாவுகளில், முதன்முதலில் தோசை சுட்ட படங்கள் எவை என்பதன் லிஸ்ட்!

சிட்டி லைட்ஸ்

ஜாலியாய் ரோட்டுல படுத்துத் தூங்கி சுத்திக்கிட்டு இருக்கிறார் ஹீரோ. பார்வை இழந்த பொண்ணுதான் ஹீரோயின். தினமும் பூ விற்கிறாங்க. தவறுதலா, ஹீரோவைப் பணக்காரன்னு நினைச்சுடறாங்க. வேற என்ன... ஹீரோவும் அதையே மெயின்டெயின் பண்றார். அவளோட கண் பார்வைக்காக ஹீரோ, பணம் கொடுத்து உதவுறார். அப்புறம், தவறான வழியில வந்த அந்தப் பணத்துக்காக, ஹீரோவைக் கைது பண்ணிடறாங்க. கண்பார்வை வந்ததும், ஹீரோயின் வேற லெவல் போயிடறாங்க. கடைசியில ஹீரோ, ’இன்னிசை பாடிவரும்’ பாடி, தான்தான் ஹீரோன்னு புரிய வைக்கிறார். கார்த்திக், விஜய், கோலிவுட், கொரியன் இந்த மாவுல தோசை சுடாதா ஆட்களே இல்லை பாஸ்.

ஆன் தி வாட்டர்ஃப்ரன்ட்

தொழிலார்கள் ஸ்ட்ரைக், யூனியன், முதலாளி வர்க்க யூனியன் எல்லாவற்றுக்கும் முதல் படம் ‘ஆன் தி வாட்டர்ஃப்ரன்ட்’ படம்தான். ஒரு கொடுமையான யூனியனில் தங்களுக்குப் பிடித்த நபர்களை மட்டுமே தினக்கூலிக்கு எடுக்கிறார்கள். தினமும் எல்லோரும் வர வேண்டும், ஆனால், அவர்கள் விருப்பப்படும் நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும், மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோ மார்லன் ப்ராண்டோ வேலை இழக்க, இறுதியாக எப்படி யூனியனை எதிர்த்து முழுக்கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு ஜெய் ஹோ சொல்லி தொழிற்சாலைக்குள் நுழைகிறார் என்பதுதான் கதை. படம் வெளிவந்த நாளில் இருந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, சரத்குமார் வரை பலர் ஆசையாய் எடுத்துக்கொண்டு ஹிட் கொடுத்த கதையின் ஆரம்பம் இந்தப் படம்தான்.

தி க்ரேட் டிக்டேட்டர்

ஒருத்தன் டம்மி பீஸ். ஒருத்தன் பெரிய ஆள். சரியான நேரத்துல ஆள் மாறாட்டம் நடக்குது, இதுதான் ‘தி க்ரேட் டிக்டேட்டர்’ கதை. அடெனாய்ட் ஹிங்கெல் (அடால்ஃப் ஹிட்லரை நக்கல் செய்வதற்காக வைத்த பெயர்) வேஷத்துல இருக்கிற சார்லி சாப்ளின் செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடியாமல் யூதர்கள், அதிகாரத்தில் இருக்கும் சார்லியைப் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். ஒருகட்டத்தில், அப்பாவி சார்லி மாட்டிக்கொள்ள அங்கு இருக்கும், அதிகாரச் சார்லியின் உடையணிந்துகொண்டு தப்பிக்க முயற்சி செய்கிறார். அப்பாவியை, அதிகார சார்லியாக நினைத்துக்கொள்கிறார்கள்.அப்பாவியான எம்.ஜி.ஆர், ரஜினி, சிவாஜி, கமல், அஜித் என இந்தத் தளத்தில் நம் வைடிவேலுகூட கதை செய்து இருக்கிறார்.

ஸ்கர்ஃபேஸ்

முதல் கேங்ஸ்டர் படம் ‘லிட்டில் சீசர்’ என்றாலும், ஒரு நிழல் உலக தாதாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டு, பல தோசைகளை ஊற்ற வைத்த பெருமை 1932-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்கர்ஃபேஸ்’ படத்தையே சேரும். சிகாகோவில் இருக்கும் டானான ஜானியின் குழுவில் அடியாளாக இருக்கிறான் ஹீரோ டோனி. டோனி எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லோரையும் எதிர்க்கிறான். ஒருகட்டத்தில் ஜானியின் கேர்ள் ஃப்ரெண்டையும் கவர்கிறான். டோனி, தன் நண்பன் கினோவை வைத்துப் பல காரியங்கள் செய்கிறான். கினோவும், டோனியின் சகோதரியும் டோனிக்குத் தெரியாமல் காதலிக்கிறார்கள். இது தெரியாத டோனி, கினோவைப் போட்டுத்தள்ள, போலீஸிடம் டோனி பற்றி புகார் தருகிறாள் டோனியின் தங்கை. பல கொலைகள் செய்துள்ளதால், டோனியின் வீட்டைப் போலீஸ் சூழ்ந்துகொள்கிறது. துப்பாக்கிகள் முழங்க, டோனி சுட்டுக்கொல்லப்படுகிறான். ‘ஸ்கர்ஃபேஸ்’ படத்தை அப்படியே 1983-ம் ஆண்டு ரீமேக்கினார்கள். அதுவும் ஹிட். அதுபோக, இந்த கெட்ட அண்ணன்-நல்ல  தங்கை; பெரியவர் காதலியைக் கவர்தல், கூட இருக்கும் நண்பனை சுட்டுக்கொல்லுதல் என ஸ்கர் விட்டுச்சென்ற தோசை, ஊத்தப்பங்கள், ஏராளம் பாஸ்!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick