டாக்கி ஸ்டைல்!

‘கணிதன்’ படத்தில் ஒரு காட்சியில் வில்லனைத் தேடிக்கொண்டிருப்பார் அதர்வா. அப்போது ஒரு நாய்தான் வில்லன்கள் இருக்கும் பக்கம் வாலை ஆட்டிக் காட்டிக் கொடுக்கும். அப்படி நம் ஹீரோக்களுக்கு உதவி செய்த நாய்கள் பற்றி ஒரு சின்ன ரீவைண்ட்...

‘இரண்டாம் உலகம்’ படத்துல அனுஷ்கா இறந்த சோகத்தில் ஆர்யா ஆலமரத்துக்குக் கீழே சோகமா உட்கார்ந்திருப்பார். அப்போ, அவரை இரண்டாம் உலகத்துக்கு கூட்டிட்டுப் போறது யாரு? நாய்தான்!

‘அட்டகாசம்’ படத்துல அஜித்தையும், பூஜாவையும் அந்த மாதிரி ஆஸ்பத்திரியில் வைத்து கோத்துவிடுவது யார்? நாய்தானப்பு!

‘பாட்ஷா’ படத்துல ரஜினிக்கு இரண்டு பக்கமும் நடந்து வந்து உளவுத் துறை அளவுக்கு அந்தப் படத்தில் அவரை வொர்த்தாக்கினது யாரு? நாய்கள்தான் மக்களே!

இவ்ளோ ஏன், ‘துப்பாக்கி’ படத்தில் தீவிரவாதிகள் விஜய்யின் தங்கையைக் கடத்திக்கொண்டு போக, வெறும் துப்பட்டா செலவில் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து தருவது யார்? டாக்கிதான்!

‘துர்கா’ படத்தில் வரும் நாய், கார் ஸ்பீடுக்கு பொம்மை வண்டி ஓட்டும், சாதுரியமாக சாவியை ஆட்டையைப் போடும், வெடிகுண்டு வீசும். கிட்டத்தட்ட ஹரி பட ஹீரோக்கள் மாதிரி எல்லா வேலையும் பண்ணும். பார்த்துக்கிடுங்க!

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில், புனே ஜெயிலில் இருந்து பல வருஷம் கழித்து சென்னைக்கு வந்து வாயிலேயே அடி வாங்கும் விஜய்யை மணிவண்ணனுக்குக் காட்டி க்ளைமாக்ஸை சுபமாக முடிப்பதே ‘பப்பி’ எனும் நாய்தான்!

‘அன்பே அன்பே’ படத்தில் ஷாமையும், ஷர்மிலியையும்  ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ ஸ்டைலில் லெட்டர் கொடுத்து சேர்த்து வைப்பது யாரு? ஒரு பங்களா நாய்தான்!

‘கலகலப்பு’ படத்தில், பின்னால் கடித்துவைத்து சுப்பு பஞ்சுவை, பஞ்சராக்கி அவரிடம் இருந்து விமலையும், சிவாவையும் காப்பாற்றுவது யாரு ‘கூகுள்’ எனும் நாய்தான்!

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் செகண்ட் ஹீரோ சிபியாக இருக்கலாம். ஆனால், மெயின் ஹீரோ யாரு? ‘சுப்ரமணி’ங்கிற நாய்தான்!

இனிமேலாவது நாய்களுக்கு வெறும் பன்னைக் கொடுத்து பத்திவிடாம, ஓரியோ, டார்க் ஃபேன்டஸினு போட்டு நன்றி சொல்லுங்க பாஸ்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick