பன்ச் பறக்கும்ல!

கேப்டன் படங்களில் பேசும் அளவுக்கு அரசியலில் பன்ச் டயலாக்குகள் பேசுவது இல்லை. அந்த வருத்தத்தில் அரை இட்லி மட்டுமே சாப்பிட்டு கேப்டனுக்கு ‘பன்ச்’ வரிகள் பிடித்தேன். புரியுதா பாருங்க மக்கழே...

இந்தப் பழம் நழுவி பாலில் விழும்ங்கிறது பழசு; இந்தப் பழம் நழுவுறதே பால் ஊத்தத்தாங்கிறது புதுசு...

போன எலெக்‌ஷன்ல வெச்சுருக்கலாம் நான் கூட்டணி. ஆனால், இந்த எலெக்‌ஷன்ல நான் தனி. சும்மா இஷ்டத்துக்கு விளையாடலாம்...

நான் கேப்டன். கட்டுமரத்துல பயணம் பண்றவன் இல்லை, கப்பலில் பயணம் பண்றவன்.

எப்போதும் ஒருத்தனைப் பத்தி நாலு பேரும் நாலு விதமாதான் பேசுவாங்க, ஆனால், அந்த ஒருத்தன் நானா இருந்தால், நாலு பேரும் ஒரேவிதமாதான் பேசுவாங்க.

ரைட்டுல கையைக் காட்டி, லெஃப்டுல இண்டிகேட்டர் போட்டு ஸ்ட்ரெயிட்டா வண்டியை விட்டு... குட்டையையும் குழப்புவேன்... ஆட்டையையும் கலைப்பேன்.

தனி ஆளா நின்னு மேட்சை மாத்துறவன் அந்த கேப்டன் கூல். தனி ஆளா நின்னு ஆட்சியையே மாத்துறவன் இந்த கேப்டன் ஹாட்.

என்னை ‘கிக்’லேயே இருக்கிறவன்னு கலாய்ச்ச வாயெல்லாம், நான் ‘கிங்’கா மாறினதுக்குப் பிறகு அடைக்கப் போகுது...

நான் பேசுனது யாருக்குப் புரிஞ்சுதோ இல்லையோ... ஆண்டவனுக்குப் புரிஞ்சுடுச்சு. ஆண்டவன் சொன்ன பதில் எனக்குப் புரிஞ்சுடுச்சு... உங்களுக்குப் புரிஞ்சுடுச்சா?

இலையும் தாமரையும் தண்ணியை சேர்த்துக்க ஆசைப்படலாம். ஆனால், இந்த நெருப்பை சேர்த்துக்க ஆசைப்படக் கூடாது. ஆங்!

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick