இதெல்லாம் இலவசம்!

ன்றைய தேதியில் அரசியல் கட்சிகள் என்னென்ன இலவசங்களை நமக்குத் தந்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும்? சின்னதாய் காமெடி ரவுண்ட்-அப் போலாமா?

தி.மு.க: ஐ பேட், ஆண்ட்ராய்ட் போன் வித் 2ஜி கனெக்‌ஷன், செல்ஃபி ஸ்டிக், வாக்கிங் ஸ்டிக், லிப்ஸ்டிக், ஸ்போர்ட்ஸ் சைக்கிள், ட்ரெட் மில், டீ ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் டிராவலிங் பேக்குகள் (அப்படியே தூஊஊர தேசத்துக்குப் போய்ட்டு வரலாம்)

அ.தி.மு.க: அம்மா ஸ்டிக்கர் (ஒட்டுவதற்கு), அம்மா ஆட்டோ (ஓட்டுவதற்கு), அம்மா கம்ப்யூட்டர் சாம்பிராணி, அம்மா  ஊதுவத்தி, ஊதுவத்தி ஸ்டாண்ட் (தூபம் போடுவதற்கு), மேசை (தட்டுவதற்கு)

தே.மு.தி.க: நாற்காலி (தூக்கி அடிக்க), ஹெல்மெட் (அடியிலிருந்து தப்பிக்க), அல்வா, பைக் இண்டிகேட்டர், ஆங்ரி பேர்டு படம் போட்ட டீ ஷர்ட்டுகள், வாய்ஸ் சிந்தஸைஸர் மற்றும் ஹெட்போன்

பா.ஜ.க: ஆண்ட்ராய்டு போன், செல்ஃபி ஸ்டிக், வெளிநாட்டு டூர் செல்ல டிக்கெட்டுகள், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை

காங்கிரஸ்: ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்ற வேட்டி சட்டைகள், (எளிதில் கிழியாத வண்ணம்) பேரீச்சம்பழம் பாக்கெட்டுகள், குளுகோஸ் டப்பாக்கள் (தமிழக மக்களுக்கு எனர்ஜி ஏற்ற)

பா.ம.க: பவர் பாயின்ட் புரொஜக்டர், ஷிவ் கெரா, டிஜிஎஸ் பால் தினகரன் போன்ற எழுச்சி உரை பேச்சாளர்களின் சி.டிக்கள், மாஸா பாட்டில்கள் (ராமதாஸின் மாம்பழத் தாகத்தைத் தீர்க்க)

மக்கள் நலக்கூட்டணி: பெர்முடாஸ், வாக்கிங் ஷூ, டீ ஷர்ட்கள், வாக்கிங் ஸ்டிக்

நாம் தமிழர்: ஆடு மாடு கோழி வான்கோழி (மேய்க்க), முப்பாட்டன் முருகன் டாலர்கள், ‘உறவைக்காத்த கிளி’ பட டி.வி.டி-க்கள்!

-சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick