சவாலுக்கு ரெடியா?

ணையத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஐஸ் பக்கெட் சேலஞ்ச், காண்டம் சேலஞ்ச்தான். நம்ம அரசியல், சினிமாப் பிரபலங்களுக்கு எல்லாம் சேலஞ்ச் நடத்தினால்...

டி.ஆர் சேலஞ்ச் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து பேச வேண்டும். பேசும்போது முதல் வாக்கியம் ‘ம’வில் ஆரம்பித்தால், குறைந்தது பத்து வாக்கியமாவது ‘ம’வில் ஆரம்பிக்க வேண்டும். பேசும்போது, கைகளில் சொடுக்கு போட்டுக்கொண்டே ஏதாவது செய்ய வேண்டும். தலை ஆட்டுதல், உடம்பை ஆட்டுதல், தரையில் உருளுதல் எல்லாம் உங்களால் செய்ய முடிந்தால், உங்களுக்கு டபுள் கிளாப்ஸ்!

தமிழக அமைச்சர்கள் சேலஞ்ச் 60 டிகிரியில் குனிந்தபடிதான் நீங்கள் பேச வேண்டும். உங்கள் முகம் வீடியோவில் பதிவாகிறதா இல்லையா என்பதெல்லாம் முக்கியம் இல்லை. நீங்கள் 20 வார்த்தைகள் பேசுகிறீர்கள் என்றால், அதில் 10 வார்த்தைகள் அம்மாவாகத்தான் இருக்க வேண்டும்!

ஸ்டாலின் சேலஞ்ச் இரண்டு நிமிட வீடியோவாக இருந்தாலும், நீங்கள் மூன்று முறை சட்டை மாற்ற வேண்டும். பேசுவதில் பாதி நேரம், ‘நாங்கள் செய்த தவறுக்கு மன்னியுங்கள் ஆண்டவரே’ எனச் சொல்ல வேண்டும்!

கேப்டன் சேலஞ்ச் குறைந்தது இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். நீங்கள் பேசும் ஒரு வாக்கியமாவது பிறருக்குப் புரிந்துவிட்டால் நீங்கள் அவுட். இரு வார்த்தைகளுக்கு மேல் தொடர்ச்சியாக, தெளிவாகப் பேசக் கூடாது. பேசும்போது கண்ணைத் துருத்துதல், கையை ஆட்டுதல், அருகில் இருப்பவரைக் கொட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம்!

அன்புமணி சேலஞ்ச் ஒரு வட்டத்துக்குள் நடந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் சொல்ல விரும்பினால், ‘அன்புமணி ஆகிய நான்’ என்பதை, அந்த வாக்கியத்தின் முன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வைகோ சேலஞ்ச் ஏதென்ஸிலே, கிரேக்கத்திலே என ஆரம்பித்து எதையாவது பேச வேண்டும். இரண்டு நிமிடத்தில் 20 கிலோ மீட்டராவது நடக்க வேண்டும்!

சீமான் சேலஞ்ச் ஒரு கையை மேல உயர்த்தி வைத்துக்கொண்டே பேச வேண்டும். முகம் வைப்ரேட்டிங் மோடில் இருப்பது மிகமிக அவசியம். இறுதியாக லூசாப்பா நீ என முடிக்க வேண்டும்!

-கார்த்தி ஓவியங்கள் : ராமமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick