கேரக்டராவே மாறிட்டார்!

திரைப்படங்களுக்கு மேக்-அப் போட்டு ஒரு கதாபாத்திரமாக மாறூவது வேறு. ஒரு கதாபாத்திரமாகவே வாழ்வது வேறு. இப்போது வரையில் ‘மிஸ்டர் பீன்’ தொடரில் நடிப்பவரின் நிஜப்பெயரை பற்றியெல்லாம் நாம், கவலைப்படுவதே இல்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சச்சா பாரோன் கோஹெனும் அந்த மாதிரியான ஒருவர்தான் பாஸ். அவர் உருவாக்கிய சில ஜாலி கதாபாத்திரங்கள்.
 

போராட் சக்தியேவ்: போராட்டின் பிறந்த தேதி 27, பிப்ரவரி 1972. (எல்லாம் பாரோன் உருவாக்கியதுதான்). போராட் கதாபாத்திரத்திற்காக கற்பனையாக ஒரு குடும்பத்தை உருவாக்கினார் பாரோன். போராட் ஒரு கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர். கம்பளிப்பூச்சி மீசையை வைத்துக்கொண்டு பாரோன் முற்றிலுமாக போராட்டாக மாறி இருந்தார். ஈராக் போர், யூதர்கள் போன்ற பல விஷயங்களை நக்கல் அடித்தார் போரான். போராட் கதாபாத்திரத்தை வைத்து 2006-ம் ஆண்டு ‘போராட்’ என்ற காமெடிப் படத் திரைக்கதையை எழுதினார் போரான்.

அலி ஜி: ஒரு தனியார் சானலில் 2000-ம் ஆண்டு ‘தி அலி ஜி ஷோ’ என்ற பெயரில் நக்கல் நிகழ்ச்சி நடத்தினார் பாரோன். ராப் இசை பாடுபவர்கள் தங்களுக்கென தனியாக ஒரு ஸ்டைல் வைத்திருப்பார்கள். பாரோன், அலி ஜியாக வரும் நிகழ்ச்சியில் தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி இருந்தார். ராப் பாடும் இசைக்கலைஞர் போல் விரல்களை வைப்பது, குறுந்தாடி, ஆடை மாற்றம் எனக் கலக்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து ‘அலி ஜி இன் தி ஹவுஸ்’ என்ற காமெடிப் படத்தையும் எழுதி நடித்தார்.

ப்ரூனோ கெஹார்ட் : 1998-ம் ஆண்டு, ஓரினச்சேர்க்கையாளர் போல் தோற்றம் அளித்தபடி ஒரு தனியார் நிகழ்ச்சியில் அசத்தினார் பாரோன். அவர் அணியும் ஆடைகள் வினோதமாக இருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ‘ப்ரூனோ’ என்ற பெயரில் படமும் வெளியானது.
 

இதே போல் ‘டிக்டேட்டர்’ என்ற படத்தில் அட்மிரல் ஜெனரல் அலாதீன் என்ற பெயரில், அமெரிக் காவிற்கு வருகை தரும் ஓர் அயல்நாட்டு அதிபராக நடித்து இருப்பார். அவருடைய லேட்டஸ்ட் கதாபாத்திரமான நாபி பட்சர் பெயரில், ‘க்ரிம்ஸ்பை’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick