லிப்போவியம்!

கத்தின் அழகு முகத்துல தெரிஞ்சாலும், முகமும் அழகா இருக்கணும்னு சொல்லுது உலகம்! சரி... முகத்துலேயே கவர்ச்சியானது உதடு. அதுல ஓவியத்தைத் தீட்டுனா, இன்னும் அழகா இருக்கும்ல! இப்படித்தான் தன் ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா ரீட்!

கனடாவைச் சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான ஆண்ட்ரியா, சிறந்த ஓவியர். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களைப் பளிச் முகத்தோடு அனுப்புவதோடு நிற்காமல், புதுப்புது முயற்சிகளைச் செய்வாராம். புருவம், கண் இமை என வெவ்வேறு இடங்களைப் பட்டை தீட்டி அழகு பார்த்த ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் குறிதான், உதடுகள்! உதடுகள் எப்போதும் ஸ்பெஷல்தான். அந்த உதடுகளில் ஓவியங்களைத் தீட்டி, இன்னும் அதிக ஈர்ப்பைக் கொண்டுவருகிறார் ஆண்ட்ரியா. இவருடைய ஒவ்வொரு ஓவியங்களுக்கும் சமூக வலைதளங்களில் தனி மதிப்பு கிடைக்க, விதவிதமான கான்செஃப்ட்களில் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா. உதடுகளை ரசிக்க சொல்லவா வேணும்? தன் ஓவியங்களைப் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஆண்ட்ரியாவை லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

இன்னும் என்ன பாஸ் படிச்சுக்கிட்டு? படத்தைப் பாருங்க!

- கே.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick