சொல்வதெல்லாம் பொய்!

மிசௌரி பா.ஜ.க எம்.எல்.ஏ  கணேஷ் ஜோஷி என்பவர் குதிரையின் காலை உடைத்து இருக்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘குதிரைகளின் கால்களை உடைத்தால்தான், அவற்றால் பறக்க முடியும் என அதர்வன வேதத்தில் சொல்லியிருக்கிறார்கள்’ என்றார்.

மராத்தியர்களாக இல்லாதவர்களின் ஆட்டோக்களை எரித்துவிடுங்கள் என ராஜ்தாக்கரே கூறியதை அடுத்து, ராஜ் தாக்கரே வீட்டில் இருந்த ஜப்பான் நாட்டு காரை எரித்தனர் நவிநிர்மண் சேனா கட்சியினர்.

ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வரை விவசாயக்கடன் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார் அன்புமணி. மேலும் ஆட்சிக்கு வந்தால், செவ்வாய்க் கிரகத்தை பூமியோடு இணைப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

நடிகர் சங்கத்தில் இருந்து ராதாரவி, சரத்குமாரை நீக்கியுள்ளார்கள். அதனால், சமத்துவ நடிகர்கள் சங்கம் ச.ந.ச என்ற புதிய சங்கத்தைத் தொடங்கினார் சரத்குமார்.

விஜய் மல்லையா தற்போதைக்கு இந்தியா வரும் திட்டம் இல்லை எனக் கூறியிருப்பதால், வங்கிகளின் மேலாளர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு 25-ம் ஆண்டை நெருங்கிக் கொண்டு இருப்பதால், இதனைப் பெரிய விழாவாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

சென்னை விமான நிலையத்தில் 57-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்துள்ளதாம். சதம் அடிக்க வாழ்த்தும் உண்மை விசுவாசி என விமான ஊழியர் ஒருவர் போஸ்டர் அடித்து இருக்கிறாராம்.

- சத்யராணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick