எப்பவுமே இப்படித்தானா?

ம்ம ஊருக்கென சில தனிப்பெருமைகள் இருக்கு பாஸ். உடனே தாஜ்மஹால், குதுப்மினார்னு கற்பனை பண்ணாதீங்க பாஸ். இது வேற!

1000 பேரை சாகடிக்கிற அளவுக்குத் தொழிற்சாலை நடத்தினாலும், கம்பெனி ஓனர் சாகுறவரைக்கும் இந்தியா வர மாட்டார். ஏனென்றால், நாமளே மரியாதை பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்போம்.

ஒண்ணுமே இல்லாட்டியும் பெரிய ஆளுங்க வழக்குனா 20 வருஷம் இழுத்தடிப்போம். விசாரணைக் கைதியா மட்டும் 4,000 பேரை சிறையில வைப்போம்.

9,000 கோடி ரூபாய் கட்டலைனாலும் தொழிலதிபர்கள் ஜாலியாக சுற்றலாம்; ஆனால், 10,000 வாங்கிட்டு ஒரு மாசம் லோன் கட்டலைனாலும், காவல் துறையே வந்து அடிக்கும்.

அரசுக்கு சொந்தமான மரத்தை நாம வெட்டினால், கைது பண்ணி மிதி கொடுப்பாங்க. ஆனால், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டி சாமியார் விழா நடத்தினால், பிரதமரே முன்னின்று ஆரம்பித்து வைப்பார்.

300 ரூபாய் லஞ்சம் வாங்கினால், சஸ்பெண்ட் செய்து தரதரன்னு இழுத்துட்டுப் போய் அந்த நபரை உலக ஃபேமஸ் ஆக்குவோம். அதே, ஐந்து கோடி வாங்கி இருந்தா, கார்ல கூட்டிட்டுப் போவோம்.

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் மாதிரி முஸ்லிமா இருந்தாலே தீவிரவாதியாதான் இருப்பாங்கனு போலீஸ் ஸ்டேஷன்ல விசாரிக்கிறது.

24 வயசுப் பையன் தேசியக் கொடியை எரித்தால் கையை உடைப்போம். அதே தேசியக் கொடியை வைத்து பிரதமர் முகத்தை துடைத்தால் சல்யூட் அடிப்போம்.

கிரிக்கெட் போட்டி பார்க்கிறப்போ மட்டும் இந்தியா எனது நாடுனு ‘ரட்சகன்’ நாகர்ஜுனா மாதிரி கையில நாக்குப்பூச்சி வர்ற அளவுக்கு தேசப்பற்றோட இருப்போம். ஆனால், பக்கத்து மாநிலத்துல இருக்கிறவனுக்கு தண்ணிகூட தர மாட்டோம்.

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick