இது வேற லெவல் பந்தயம்!

தொலைக்காட்சிகள்ல கார் ரேஸ், பைக் ரேஸ் எல்லாம் பார்த்து இருப்போம். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துக்கிட்டே இருக்கு பாஸ். கடந்த வாரம் 11-ம் தேதி துபாயில் முதல்முறையாக உலக அளவிலான பந்தயம் ஒன்று நடந்தது. இது ட்ரோன்களுக்கான பந்தயம்.

புரியலையா ப்ரோ? ரிமோட் கன்ட்ரோல் மூலம் நாம் இயக்கும் குட்டி சைஸ் பறக்கும் ஹெலிகாப்டர்கள்தான் விழாவின் ஹீரோக்கள். உலகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் இந்த ட்ரோன் திருவிழாவுக்குக் களம் இறங்கினார்கள். மார்ச் 11, 12-ம் தேதிகளில் நடைபெற்ற பந்தயத்தில் அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 32 அணிகளுக்குள் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு ட்ரோனும் மணிக்கு சுமார் 100 கிமீ வேகத்தில் செல்லுமாம். ட்ரோன் பந்தயத்துக்காகப் பிரத்யேகமாக இந்த மைதானத்தில் செட் அமைத்து இருக்கிறார்கள். வயது, பாலினம் எல்லாவற்றையும் கடந்து நடக்கும் போட்டி இது. அடுத்த ஆண்டு இன்னமும் ஆட்கள் கூடுவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள் போட்டி நடத்துபவர்கள்.

ஏன்டா இதெல்லாம் ஒரு விளையாட்டானு கடுப்பாகுறீங்களா? முதல் பரிசுத் தொகை 1.7 கோடியாம் பாஸ். அடுத்த ஆண்டுக்குள்ள எப்படியாவது ட்ரோன் விளையாடக் கத்துக்கிட்டு கப் வாங்குறோம். ரெடியா மக்களே!

-கார்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick