“நான் அக்‌ஷரா இல்லை!”

டி.வி பார்க்கிற பயபுள்ளைங்க எல்லோருக்குமே ஏர்டெல் 4ஜி விளம்பரப் பொண்ணைத் தெரியாமல் இருக்காது. பெயர் சாஷா செட்ரி! ஆண்கள்போல டாம்பாய் ஹேர்ஸ்டைலில் தெறிக்கவிடும் சாஷா இப்போது இணையத்திலும் செம ஹாட். ஆமாம். இவரின் ட்விட்டர் தளத்தில் (ரிக்‌ஷாராணி) ஹாட்டான படங்களைத் தெறிக்கவிட்டிருக்கிறார். சாட்டிங்கில் பிடித்தால் கடகடவென பேசுகிறார்.

‘‘நான் டேராடூன் பொண்ணு. நிருபராக ஆசைப்பட்டவள், காப்பி ரைட்டராக மும்பையில் வேலை பார்த்தேன். ஆனால், எனக்கு அதில் மனம் லயிக்கவில்லை. இசை, கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது என ஏதேதோ பண்ணிக்கொண்டிருந்த என்னை விளம்பரப் பட இயக்குநர் ராம் மத்வானி ஒரு விழாவில் சந்தித்தபோது என்னை ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார். என்னுடைய பாய் கட் ஹேர்ஸ்டைலினால்தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் எல்லாமே கனவு போல இருந்தது. ஆனால், விளம்பரத்தைப் பார்த்தே இத்தனை பேர் ரசிகர்களாகக் கிடைப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னை ஆரம்பத்தில் அக்‌ஷரா ஹாசன் என நினைத்துக்கொண்டு சிலர் நேரில் வாழ்த்திப் பேசியது மட்டும் லேசான வருத்தம்” என்று சொல்லும் சாஷாவிடம் வயதைக் கேட்டால் டக்கென பதில் சொல்கிறார்.

‘‘ஸ்வீட் 19!’’

-ஆர்.சரண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick