இவர் வழி விண்வெளி!

ஸ்காட் கெலி, ஒட்டுமொத்த உலகமுமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கும் ‘வின்வெளி ரிட்டர்ன்’ மனிதர். 340 நாட்கள் விண்வெளியில் தங்கி இந்த மாதம்தான் பூமிக்குத் திரும்பினார். அவரை பற்றி ‘நச்’னு பத்து விஷயங்கள்...

ஸ்காட் கெலி அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் 1964-ம் ஆண்டு பிறந்தார். ஸ்காட் கெலியும் அவரது சகோதரர் மார்க் கெலியும் இரட்டையர்கள். அது மட்டுமல்லாது மார்க் கெலியும் விண்வெளி வீரர்தான். சூப்பர்ல...

ஸ்காட் கெலி ஒரு விண்வெளி வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பொறியாளர், ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை கேப்டனும்கூட.

ஸ்காட் விண்வெளியில் 340 நாட்கள் வின்வெளியில் இருந்ததன் மூலம், அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த அமெரிக்கர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

விண்வெளியில் இருந்தபோது, பூமியில் இருக்கும் தன் தோழியிடம் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் சகட்டுமேனிக்கு சாட் செய்திருக்கிறார். பூமியை விட்டுப்போனாலும் ஃபேஸ்புக் விட மாட்டேங்குதே!

இதே சமூக வலைதளத்தில் வின்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை அப்லோடி உலகையே ஆச்சரியப்பட வைத்தார். அவர் எடுத்த ராமேஸ்வரம் புகைப்படம் நம் ஊரில் ஃபேமஸ்.

ஸ்காட், தான் தங்கியிருந்த ஓடத்தில் பூச்செடி வளர்த்து அதில் பூவையும் பூக்கச் செய்திருக்கிறார்.

விண்வெளியில் ஸ்காட்டுக்கு நல்ல நண்பராக இருந்தது ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் கோர்னியேன்கோ. ஒரே மூஞ்சியைப் பார்த்துப் பார்த்து போர் அடிக்கலையா தல?

இவ்வளவு நாட்கள் விண்வெளியில் இருந்த காரணத்தினால் ஸ்காட்டின் உயரம் 1.5 இன்ச் கூடியிருக்கிறது. காரணம், விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதனால் முதுகெலும்புகள் ஒன்றுக்கு ஒன்று விலகி விரிவடையுமாம். இப்போது நிலைமை சரியாக, பழைய உயரத்துக்கே வந்துவிட்டார்.

அதேபோல், விண்வெளியில் இருந்த நாட்களில் தோலுக்கும், தொடு உணர்ச்சிக்கும் வேலையே இல்லாமல் இருந்ததால், இப்போது தோல் மீது எந்தப் பொருள் பட்டாலும் தோலே எரிவது போன்ற உணர்வு ஏற்படுகிறதாம். ஆத்தி...

பூமியில் வந்து இறங்கியதும் கேபிள் ஒயரை செருகி செக்-அப் செய்யக் கூட்டிப் போய் விட்டார்கள். நிம்மதியாக மனுஷனைத் தூங்கக்கூட விட மாட்றாங்களாம். இன்னும் செக்-அப்கள் ஆறு மாசத்துக்கு தொடருமாம். பாவத்த...

விண்வெளியில் ‘நீங்கள் கண்டு நடுங்கிய விஷயம் எது?’ என சமூக வலைதளத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ‘வேறேது... கழிவறைதான்’ என பதிலளித்தார். நக்கலா சொல்றாரா? சோகமா சொல்றாரா?னு தெரியல...

பூமிக்குத் திரும்பியதும் ஸ்காட் முதன்முதலில் சாப்பிட்டது ‘வாழைப்பழம்’. உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும் பிடிக்கும்.

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick