காலில் இருக்கு மேட்டர்!

மெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் கியாஹி சீமோர் என்று ஒருவர் இருக்கிறார். இவருடைய  ஸ்பெஷல் இவர் ஓட ஆரம்பித்தால் யாராலும் பிடிக்க முடியாது. என்ன ஸ்பெஷல் என்று முடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம்.

சின்னவயதில் இருந்தே கியாஹிக்கு ஒரு சந்தேகம், மனிதர்களால் ஏன் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே வேகமாக ஓட முடியவில்லையென்று. ராத்திரி பகலாக இதையே யோசித்துக் கொண்டிருந்தவருக்கு ஷூவில் சில மாற்றங்களைச் செய்தால் கண்டிப்பாக  ஓட முடியும் என்று தோன்ற உடனடியாக வேளையில் இறங்கிவிட்டார்.

தொடக்கத்தில் என்னென்னமோ செய்து பார்த்தும் எல்லாமே சொதப்ப, ஒருநாள் எதேச்சையாக ஒரு நெருப்புக்கோழியைப் பார்த்தார். இவை மட்டும் எப்படி மணிக்கு 70 கிலோ மீட்டரில் வேகத்தில் ஓடுகிறதென்று யோசித்தபடி அதன் கால்களைப் பார்த்திருக்கிறார். நீளமான இந்தக் கால்கள்தான் அந்த வேகத்துக்குக் காரணம் என்று கண்டுபிடித்தவர், அதை மனதில் வைத்து ஷூவை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். ஷூவின் அடியில் ஸ்பிரிங் வைத்து குதிகாலுக்கு அடியில் இரும்புத் தகடுகளை வைத்து இன்னும் சில கம்பிகளையும் அதோடு இணைத்து சமீபத்தில் ஒரு ஷூவைக் கண்டுபிடித்து விட்டார். அதற்கு பயோனிக் பூட்ஸ் என்று பெயரும் வைத்துவிட்டார். இனி இதை சோதனை செய்து பார்க்க வேண்டியதுதான் பாக்கி என முடிவெடுத்தவர், நியூயார்க் நகரில் மிகப்பெரிய கூட்டத்துக்கு நடுவே சென்று ஷூவை எடுத்துக் காலில் மாட்டி சூப்பராக ஒரு ரவுண்ட் வந்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். காரணம் அவர் ஓடி வந்தது 40 கிமீ வேகம். அடுத்தடுத்து காடு, மலை எனக் கரடுமுரடான பல இடங்களில் ஓடியதை அப்படியே பதிவு செய்து யூ டியூப்பிலும் ஏற்றி ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறார். தரையிலும் தண்ணீரிலும்கூட இதை அணிந்துகொண்டு ஓட முடியும் என்பது இதன் சிறப்பு. அவர் அப்படி ஓடிவரும்போது கிட்டத்தட்ட நிலாவில் தத்தளிக்கும் விண்வெளி வீரரைப் போலவே இருக்கிறார்.

இன்னமும் திருப்தி அடையாத கியாஹி அடுத்து அதிரடிக்குத் தயாராகிவிட்டார். அதாவது சிறுத்தையை விட வேகமாக ஓடக்கூடிய வகையில் ஒரு ஷூவை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். தினமும் காலையில் இந்த ஸ்பெஷல் ஷூவை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் இவரை அந்தப் பகுதிக்கு புதிதாக வருபவர்கள் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுப் போறாங்க பாஸ்!

-ஜுல்பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick