சினிமால்!

மிழ் சினிமாவில் புதுமை செய்கிறோம் என்று அடிக்கும் கூத்துக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. அடுத்து வரவிருக்கும் ஒரு புதுப்படத்தில் இரண்டு நாய்கள்தான் ஹீரோ, ஹீரோயினாம். நிதின் சத்யா வளர்க்கும் ஆண் நாய்க்கும், ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் பெண் நாய்க்கும் காதலாம். இது தவிர டூயட், முதலிரவு காட்சியும் இருக்கிறதாம். முடியல்ல!

தமிழ் சினிமாவில் இப்போதைய பிஸியான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். கபாலி, விஜய் படம், கொடி, இறைவி என அடுத்தடுத்த முக்கிய படங்கள் இவர் கையில் தான். ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு நேரம் எடுத்து பிரமாதமாக இசையமைக்க வேண்டும் என்பதால் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு உடனடியாக இசையமைத்துத் தர முடியாது என செல்வராகவனிடம் கூற, அதைப் புரிந்து கொண்ட செல்வராகவனும் ஆல் தி பெஸ்ட் கூறி விட்டு வேறு இசையமைப்பாளரைத் தேடிப் போய் விட்டாராம். வட போச்சே!

‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தற்போது அவரின் ‘சரோஜா’ படத்தின் பார்ட் 2வும் உருவாக இருக்கிறதாம். ஆனால், இயக்குவது வெங்கட் பிரபு அல்ல, அவரிடம் உதவியாளராக இருந்த ஸ்கந்த பிரியன் என்பவர்தான் வெங்கட் பிரபுவின் ஆசியோடு இயக்குகிறாராம். அதே நடிகர்கள் நடிப்பார்களா? இல்லையா? என்பது மட்டும் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ’பிரியாணி’ மட்டும் பார்ட் டூ எடுத்திடாதீங்க!

மாமனார், கணவர், மருமகள் என மூவருமே ஓடி ஓடி நடித்து வருகிறார்கள் என்றாலும் மாமனார் அமிதாப் பச்சனின் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘சரப்ஜித்’ படம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. அதே நாளில்தான், அமிதாப் நடித்துள்ள டிஇ3என் (TE3N) படமும் வெளியாக இருக்கிறது. தன் படத்தால் மருமகள் படத்துக்குப் பாதிப்பு வரக்கூடாது என்பதால் தன் படத்தைத் தள்ளி ரிலீஸ் செய்யச் சொல்லி விட்டாராம் அமிதாப். நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு, மாமா கலங்குறேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்