எனக்கு சங்கீதமே தெரியாது!

பாடகர் மகாலிங்கம்- ‘ரஜினி முருகன்’  படத்தில் வரும் ‘ஆவி பறக்கும் டீக்கடை’ த ஒரே பாட்டில் கண்டபடி பிரபலமாகிட்டார்.

“திருவாடனைப் பக்கம் நெய்வயல் கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே பாடகர் ஆகணும்னு கொள்ளை ஆசை. ஒரு காதுகுத்து நிகழ்ச்சியில்தான் முதல் முறையா பாடக் கூப்பிட்டாங்க. அடுத்து கல்யாண மேடைக்கு ப்ரோமோஷன் கிடைக்க, அப்படியே ‘லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு’,  ராஜ் டி.வி ‘டாப் சிங்கர்’னு கலந்துக்கிட்டேன். டி.வியில் பாட ஆரம்பிச்சதும் வெளியூர் கச்சேரிகளுக்குப்  போகும்போது ‘சன் டி.வி புகழ்’ மகாலிங்கம்னு போஸ்டர்ல பெருசா போடுவாங்க. அதைப் பார்க்கும்போது ஜாலியா இருக்கும். கொஞ்ச நாள் ஹைதராபாத்தில் வேலை பார்த்தேன். பாட வாய்ப்பு  வரும்போது சென்னைக்கு வந்துபோவேன். அது ரொம்ப கஷ்டமான நேரம். பஸ்ஸுக்கு கூட காசு இருக்காது. கணேஷ் வைதீஸ்வரன்னு ஒருத்தர்தான் செலவுக்கு காசு கொடுத்து ஹெல்ப் பண்ணுவார். அப்புறம் கல்யாணமும் ஆச்சு. என்ன செய்றதுனு மண்டை குழம்பிப் போய் நிற்க விஜய் ஆண்டனி சார் மூலமா அதிஷ்டக் கதவு திறந்துச்சு.

‘சலீம்’ படத்தில் ‘சம்போ சிவ சம்போ’ பாடலை என்னைப் பாட வெச்சார். பெண்களைத் திட்டுற மாதிரியான பாட்டுதான். இருந்தும் பெண்களே அதை  ரசிச்சாங்க. அடுத்து ‘கொம்பன்’ படத்தில் ‘கம்பிக்கரை வேட்டி’ பாடினேன் அதன்மூலம்  ரஜினி முருகன், அரண்மனை, வெற்றிவேல்னு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. இது தவிர சில தெலுங்குப் படங்களிலும் பாடியிருக்கேன். ‘ரஜினி முருகன்’ ஹிட்டுக்கு அப்பறம் போற வர்ற இடத்தில் எல்லாம் என்னை டீ கடை சார்னு செல்லமா கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

லேட்டஸ்டா கவுண்டமணி சார் ஹீரோவாக நடிக்கும் ‘வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் ‘பட்டி பட்டி கவ் கவ் கவுண்டர்’னு ஒரு பாட்டுப் பாடியிருக்கேன். இது நிச்சயம் அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படியோ ராஜா சார் இசையில் தரை தப்பட்டையில் பாடியாச்சு. அதே மாதிரி இசைப்புயல் இசையிலும் பாடணும்.

இன்னொரு முக்கியமான விஷயம், எனக்கு கர்நாடக சங்கீதம்னா என்னனே தெரியாது. உஸ்தாத் படே குலாம்னு ஒரு ஹிந்தி பாடகர் இருக்கார். அவர் சூப்பரா பாடுவார். அவருடைய பாட்டை யூ டியூபில் டவுன்லோட் பண்ணிக் கேட்டு அவர் மாதிரி பாடி பிராக்டிஸ் பண்ணுவேன் அவ்வளவுதான்!” என்கிறார்.

கெத்துதான்!

- ஜுல்ஃபி, படம் : மீ.நிவேதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick