கதை விடுறாங்க!

‘சாலையில் சென்று கொண்டிருந்த அஸ்வினைக் கைகாட்டி நிறுத்திய டிராபிக் போலீஸ் அஸ்வினிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார்! - இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...!

ராஜா: ‘சார் லைசென்ஸ்லாம் இருக்கு சார்... பாருங்க’ என்ற அஸ்வினிடம், ‘அது யாருக்குய்யா வேணும்? கொஞ்சம் தண்ணி குடு தம்பி’ எனக் கேட்ட போலீஸைப் பார்த்து பரிதாபப்பட்ட அஸ்வின் , வண்டியை ஓரம் கட்டி ஜில்லான ஜூஸ் வாங்கிக் கொடுத்தான்!

ஆனந்த்: ‘தம்பி நீ ரவிச்சந்திரன் அஸ்வினா? இல்லை முருகன் அஸ்வினா?’ எனக் கேட்டார். அதைப் பார்த்த வடிவேலு ‘ பாவம், அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு’ என்றார்.

சண்முக சுந்தரம்:  “ஒரு வழிப் பாதையிலே இவ்வளவு வேகமா எங்கடா போற?” என்று கேட்டதற்கு, அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்காக “சார் அரசு மருத்துவமனையில ஒரு நோயாளிக்கு என்னுடைய அரிய வகை ரத்தம் தேவைப்படுதாம். அதான் ரத்த தானம் பண்ணப் போயிட்டு இருக்கேன்” என பொய் சொல்லிவிட்டு வண்டியை எடுத்து வேகமாக ஒரு வளைவில் திரும்பியவனை எதிரே படு வேகமாக வந்த லாரி தூக்கியெறிந்து சம்பவ இடத்திலே பலியானான் அஸ்வின்.

அருண்: ‘அன்னைக்கு ஏன்டா அந்த நோ பால் போட்ட?’ என அவன் முன் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.

கார்த்திக்: ‘மெலோடி ஏன் இவ்ளோ சாக்லேட்டியா இருக்கு?’ என்று கேட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்