தொப்பைனா சப்பையா?

தொப்பையைக் குறைக்க சோனா பெல்ட்டில் இருந்து சுடுதண்ணி வரை நீங்கள் ட்ரை பண்ணிப் பார்த்தவரா? அப்போ இந்த மேட்டர் உங்களுக்குதான். ஊரெல்லாம் தொப்பையைக் குறைக்கிறது பற்றிதான் ஒரே பேச்சா இருக்கு. ஆமா இப்போ எதுக்காகத் தொப்பையைக் குறைக்கணும். அதனால் என்னென்ன நன்மைகள் இருக்குனு தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கோங்க...

தொப்பை இருந்தா போலீஸ் வேலை சர்வ சாதாரணமா கிடைக்கும். ஒருவேளை போலீஸ் வேலையில் உங்களுக்கு விருப்பம் இல்லைனாகூட ஏதாவது பிரச்னையில் நீங்க மாட்டும்போது இந்தத் தொப்பைதான்  உங்களைக் காப்பாற்றும். சமயங்களில் மஃப்டி போலீஸ்னு நினைச்சு மாமூல் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.

தொப்பை ஒரு சறுக்கு மரம் மாதிரி. சின்னக் குழந்தைகளை வயிற்றில் தூக்கிவைத்து சறுக்கி சறுக்கி விளையாட விடலாம். இதனால் கொழுப்பு குறையவும் வாய்ப்பிருக்கு.

குனிந்து, நிமிர்ந்து கஷ்டப்பட்டுப் பார்க்கும் வீட்டு வேலைகளை, பாவம் குனிய முடியாதுனு செய்யச் சொல்ல மாட்டாங்க. ஃப்ரீயா டி.வி பார்த்துட்டு நொறுக்குத் தீனி தின்னுட்டு நோகாம வாழலாம்.

தொப்பை பெருசா வளர்ந்துக்கிட்டே போறதால அடிக்கடி ட்ரெஸ் டைட்டா போயிடும். அதனால புதுசு புதுசா சட்டை பேன்ட் வாங்கலாம். ஜாலியா இருக்கலாம்.

பஸ்ஸில் உங்களுக்குப் பக்கத்தில் உட்கார எல்லோரும் பயப்படுவாங்க. குறிப்பா ஜன்னல் சீட்டுக்காரன் அலறுவான். ஏன்னா அவன் ஸ்டாப்பிங் வந்ததும் வெளியேற முடியாம உங்க தொப்பையில் சிக்கி சின்னாபின்னமாகி வெளியே வர்றதுக்குள் பஸ் கிளம்பிடும். அதனால் இரண்டு பேர் சீட்டில் நீங்க சிங்கிளா ட்ராவல் பண்ணலாம்.

‘பல்லேலக்கா’ பாட்டினில் வருவதைப்போல வயிற்றில் படம் வரைந்து சம்பாதிக்கலாம். அதுவும் இப்போ எலெக்‌ஷன் டைம். அதனால் அரசியல் விளம்பரங்களுக்கு வாடகைக்கு விடலாம். தொப்பையின் அளவைப் பொறுத்து பிஸினஸ் பேசலாம்.

இரண்டு கையிலும் பொருட்களை வைத்துக்கொண்டு கதவைத் திறக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் தொப்பையை வெச்சே கதவைத் திறக்கலாம். தொப்பையை லைட்டா எக்கி, டொம்முனு மோதினா போதும்.

கல்யாணம், காதுகுத்து மாதிரி ஃபங்ஷனுக்குப் போனா வயித்தைப் பார்த்துட்டு நல்லா சாப்புடுற மனுஷன்னு நினைச்சுக் கறியையும், சோத்தையும் அள்ளி அள்ளி வைப்பாங்க. ஃபுல் கட்டுக் கட்டலாம். ஆனா எல்லா இடத்திலும் இதே மாதிரி கிடைக்கும்னு சொல்ல முடியாது.

நைட் தலையணையைக் கட்டிப்பிடிச்சு தூங்கியே பழக்கப்பட்டவங்க, வெளியூர் போறப்போ பக்கத்தில் இருப்பவர் மேல் கை, காலைத் தூக்கிப்போட்டு டார்ச்சர் பண்ணி வாங்கிக் கட்டிக்குவாங்க. அந்த மாதிரி சமயங்களில் தன் தொப்பையே தனக்குத் துணைனு நினைச்சு தனக்குத்தானே கட்டிப்பிடிச்சுத் தூங்கலாம்.

இனிமேலாவது தொப்பைனா அலட்சியமா பார்க்காதீங்க! 

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick