மறுபடியும் முதல்ல இருந்து....

‘மன்மோகன் சிங் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார்’ங்கிற செய்தியை சமீபத்தில் கேட்டதும் நம் ஊர் அரசியல்வாதிகளும் பழைய பணிக்கே திரும்பினால் எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். இந்தா இப்படித்தான் இருக்கும்.

ஜெயலலிதா: ஜெயலலிதா மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார். அதிலும் ‘அம்மா’ கேரக்டரில் மட்டுமே நடிப்பார். கதைப்படி ஹீரோ, அம்மாவின் காலிலேயே விழுந்து கிடக்க வேண்டும். மற்ற குணச்சித்திர கேரக்டர்கள் படத்தில் ஜெயலலிதா வரும் எல்லா ஃபிரேமிலும் குனிந்தேதான் வசனம் பேச வேண்டும், ஹீரோவுக்கு இன்ட்ரோ சீன் வெச்சாலும் சரி, வைக்கலைனாலும் சரி, ஜெயலலிதாவுக்கு கண்டிப்பாக இன்ட்ரோ சீன் வைத்தாக வேண்டும். அதுவும் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட்டை மாட்டிக்கொண்டு குதிப்பது போன்ற சாகசமான காட்சிகள் வைத்தால் இன்னும் சிறப்பு. படத்தில் ஆங்காங்கே ‘செய்வீர்களா?, நான் சொல்லாததையும் செய்வேன்’ போன்ற பன்ச் டயலாக்குகள் வைத்தால் சிறப்போ சிறப்பு. அடிக்கடி, தான் நடிக்கும் படத்தின் ஹீரோவை மாற்றுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்