சினிமா விடுகதை!

ம்ம ‘சிங்கம்’ ஸ்டார் சூர்யாவின் படங்கள்தான் இந்த வார சினிமா விடுகதைகளின் விடைகள் பாஸ்!

1.
ஸ்லிம் அழகியை நினைத்து யோகா டான்ஸ் ஆடினாரே... தெறிக்க வைத்தவருடன் கூட்டணி போட்டு நடிச்ச படத்துல ‘அக்னி நட்சத்திரம்’ அனல் சுட்டுச்சே! என்ன படம்...? கண்டுபிடிங்க பாப்போம்!

2. வாசமான படத்துல இசைமேதைகள் ரெண்டு பேருக்கும் உள்ள பகையே கதை. காதல் அரும்பாகி, மொட்டாகி, பூவாகி, காயாகி, கனியாகிக் கல்யாணம் வரை போன கதை இந்தப் படத்தை அவரால மறக்க முடியுமா?

3. காக்கிச்சட்டைக்குப் பேரு வாங்கிக் கொடுத்தாரே... நான் அவன் இல்லைனு சொன்னவரைத் துவைச்சு எடுத்தாரே... டீச்சர் மேலே வெச்ச பாசத்தை சொல்ல ஒண்ணா ரெண்டா வார்த்தைகள். ஆனாலும் கடைசியில அந்தப் புள்ளகூட சேரலையே... சரி ஃபீல் பண்ணாம சொல்லுங்க பாப்போம்!

4.‘ஆலயமணி’ படத்துல அபிநய சரஸ்வதி சரோஜா தேவி பயன்படுத்தின சோப்பு டப்பாவை 200 ரூபாய்க்குத் தாராளமாக் கொடுத்தாரே...அநியாயமா உசுரவிட்டாலும் மனசுல நின்னாரே... தெக்கத்திப்படம் தெரியலையா பாஸு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்