சார்ஜர்கள் பலவிதம்!

மொபைல் வெச்சிருக்கும் அத்தனைப் பேரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு பிரச்சனை சார்ஜ் நிற்காத பேட்டரி. அந்த நேரத்தில் கையில் சார்ஜர் இருந்தும் சார்ஜ் போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. இதுக்குத்தான் ஊருக்குள்ளே ஏகப்பட்ட ஐடியா மணிகள் இருக்காங்களே அவங்க ராப்பகலா தூங்காம கண்டுபிடிச்ச தீர்வுகள் இவை.

ஆப்பிள் சார்ஜர்: இது ஆப்பிள் கம்பெனி சார்ஜர் இல்லை நாம கடிச்சு சாப்பிடுற ஆப்பிள். டேட்டா கேபிளின் சின்ன முனையை போனில் குத்தி பெரிய முனையை பழத்தில் குத்தினால் சார்ஜ் ஏறுமாம்.  உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், எலுமிச்சம்பழத்திலும்  இது வேலை செய்யும்னு சொல்றாங்க. ட்ரை பண்ணி பார்த்துட்டு ஏறலைனா என்னைத் திட்டாதீங்க !

பானை சார்ஜர்: இதை பவர் பாட்னு சொல்றாங்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவைத்தால் அது கொதிக்கக் கொதிக்க மொபைல் சார்ஜ் ஏறுமாம். இதன் விலை 149 அமெரிக்க டாலர்கள்.

சோலார் உள்ளாடை சார்ஜர்: இந்த சார்ஜருக்கு டெமோ காட்டுவது பச்சை டிரெஸ் போட்ட க்யூட்டான பொண்ணுங்க. வயிற்றில் சோலார் பேனலைக் கட்டிக்கொண்டு அதுக்கு மேலே மொபைலை வெச்சிட்டா போதுமாம். கிறுகிறுன்னு சார்ஜ் ஏறுமாம். போற இடத்துக்கெல்லாம் இதைத் தூக்கிட்டுப் போகலாம் என்பது கூடுதல் சிறப்பு.

பவர் பம்ப் சார்ஜர்: இது நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட விஷயம்தான். நீங்க சைக்கிளுக்குக் காத்தடிப்பீங்களா? அப்போ இது ரொம்ப ஈஸி. மொபைலைத் தரையில் படுக்க வெச்சு சைக்கிள் பம்ப் மாதிரி இருக்கும் சார்ஜரை மிதிக்க மிதிக்க சார்ஜ் ஏறும். ஓவரா மிதிச்சா சைக்கிள் ட்யூப் மாதிரி வெடிக்கவும் செய்யலாம்.

எதுக்கும் ஒருதடவை எல்லாத்தையும் செக் பண்ணிக்கங்க மக்களே!

-ஜுல்ஃபி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick