செய்வோம்ல நாங்க செய்வோம்ல!

‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பது போல, நாம் உபயோகிக்கும் எல்லாப் பொருட்களையும் ஒரு கட்டத்தில் லைட்டாக பட்டி டிங்கரிங் பார்த்து வேறு வேலைக்காக மாற்றி உபயோகிக்க ஆரம்பித்துவிடுவோம். புரியலையா? சாம்பிளுக்கு...

ஸ்க்ராட்ச் ஆகி ஓடாமல் போகும் எல்லா சி.டி கேசட்டுகளையும் அழகுக்காக சுவற்றில் மாட்டிவைத்து ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

நாம் ‘ஃப்ளேம்ஸ்’ போட்டுப் பார்த்து குதூகலித்த காதலியின் பெயரைப் பின்னாளில், பாஸ்வேர்டாய் மாற்றி வைத்து கீபோர்டில் நங் நங் என டைப் செய்வோம்.

மொட்டைமாடியில் ஒளித்துவைத்த காலி ஃபாரின் சரக்கு பாட்டில்கள், பின்னாளில் சமையலறையில் எண்ணெய் ஊற்றிவைக்க உபயோகப்படுத்தப்படும்.

நாள்பட்ட பிளாஸ்டிக் குடங்களைப் பாதியாக அறுத்து, அதில் டேபிள் ரோஸ் வளர்த்து டேலன்டாகப் பயன்படுத்துவோம்.

கீழே கிழிந்து நார் நாராய்த் தொங்கும் ஜீன்ஸ் பேன்ட்டுகள் ஷார்ட்ஸாகவும், வெளுத்துப்போன டி-ஷர்ட்டுகள் கரித்துணியாகவும் மாறிவிடும்.

பழைய சேலைகள் ஜன்னல் ஸ்க்ரீனாகவோ, தலையணை உறையாகவோ மாறிவிட அதிக வாய்ப்பிருக்கிறது.

சில தண்ணீர் பாட்டில்கள் அடிகுழாயில் இருந்து தண்ணீர் ஒரே மாதிரி விழ மாட்டிவைக்கப் பயன்படுத்தப்படும்.

பெரும்பாலும் படித்து முடிக்கப்பட்ட புத்தகங்கள், சப்பாத்திக்கு மாவு தேய்க்கும்போது தேய்த்த மாவை அடுக்கி வைக்கத்தான் பயன்படும். அதான், டைம்பாஸ் சின்னதா இருக்கு. ஹி ஹி ஹி...

-ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick